இந்து முறைப்படி திருமணம்! ஏழைப் பெண்ணுக்கு தங்கமும் கொடுத்து வாழ்த்திய பள்ளிவாசல்!

இதைவிட மத நல்லிணக்கத்திற்கு வேறு ஏதேனும் சான்று வேண்டுமா என்று கேள்வி எழுப்பி, புது மண தம்பதியினருக்கும், கேரள மக்களுக்கும் வாழ்த்து கூறி வருகின்றார்கள் நெட்டிசன்கள்! 

Kerala Hindu couple married in cheruvally Muslim Jamaat mosque

Kerala Hindu couple married in cheruvally Muslim Jamaat mosque : கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ளது காயம்குளம் என்ற இடம். இங்கு ஒரு இந்து பெண்ணின் திருமணம் மசூதியில் நடைபெற்றது பெரும் வரவேற்பையும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சு என்ற பெண்ணின் தகப்பனார் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அஞ்சுவின் தாயார் மசூதி கமிட்டியிடம் உதவி கேட்டுள்ளார். அவரின் உதவியை ஏற்றுக் கொண்ட செருவல்லி முஸ்லீம் ஜாமாத் மசூதி கமிட்டி அஞ்சுவுக்கும், அவருடைய துணை சரத்துக்கும் இந்து முறைப்படி மசூதியில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தது.

திருமணம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அஞ்சு தம்பதியினர்

இந்து முறைப்படி, வேதங்கள் ஓதப்பட்டு, சரத், அஞ்சுவை மணம் முடித்தார். இந்த திருமண விழாவைக் காண ஏறத்தாழ சுமார் 1000ம் நபர்கள் மசூதிக்கு வந்துள்ளனர். கேரளத்தின் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று மக்கள் பலரும் இந்த திருமண நிகழ்வை பாராட்டியுள்ளனர்.  இந்த நிகழ்வினை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனே ஃபேஸ்புக்கில் பகிர, சற்று நேரத்தில் தென்னிந்தியா முழுவதும் வைரலாகிவிட்டது இந்த திருமண நிகழ்வு.

மசூதி கமிட்டி திருமணம் மட்டும் நடத்தி வைக்காமல், மேலும் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சைவ சதைய உணவு விருந்தும் படைத்துள்ளது. அஞ்சுவுக்கு திருமண பரிசாக 10 பவுன் நகையும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுத்துள்ளனர் கமிட்டி உறுப்பினர்கள். இந்தியா முழுவதும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும்  ஒவ்வொன்றாய் கிளம்ப, ரோல் மாடலாக இருந்து வருகிறது கேரளம். இதைவிட மத நல்லிணக்கத்திற்கு வேறு ஏதேனும் சான்று வேண்டுமா என்று கேள்வி எழுப்பி, புது மண தம்பதியினருக்கும், கேரள மக்களுக்கும் வாழ்த்து கூறி வருகின்றார்கள் நெட்டிசன்கள்!

மேலும் படிக்க :பிரேமத்துக்கு பெயர் பெற்ற கேரளா, இப்போது ரயில் ஸ்நேகம் ஆகிறது….

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala hindu couple married in cheruvally muslim jamaat mosque as per hindu rituals

Next Story
ஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com