New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Trending-card-02-2.jpg)
அச்சு அசலாக மஹிந்திராவிற்கு டஃப் தரும் வகையில் இந்த ஜீப்பை வடிவமைத்திருக்கிறார் அவர்.
Kerala man builds miniature replica of Mahindra jeep for his kids : தங்களின் குழந்தைகளுக்கு பிடித்த அனைத்தையும் செய்வது பெற்றோர்கள் மகிழ்வதுண்டு. அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் வாங்குவதில் துவங்கி அனைத்தையும் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக செய்வார்கள். இங்கே கேரளாவை சேர்ந்த ஒருவர் தன் குழந்தைகளுக்காக என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். தன்னுடைய குழந்தைகளுக்காக மினி ஜீப் ஒன்றையே தயாரித்துள்ளார்.
மஹிந்திரா ஜீப்பின் மாதிரியாக இருக்கும் இந்த ஜீப்பில் 1000 வாட்ஸ் மோட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் கியர் பாக்ஸ், பவர் ஸ்டீரிங், கழற்றி - மாட்டும் வகையில் டாப் பகுதி என்று அச்சு அசலாக மஹிந்திராவிற்கு டஃப் தரும் வகையில் இந்த ஜீப்பை வடிவமைத்திருக்கிறார் அவர்.
மலப்புரம் மாநிலம் அரீக்கோடு பகுதியில் வசிக்கும் ஷகீர் இந்த ஜீப்பை தன்னுடைய குழந்தைகளுக்காக உருவாக்கி கொடுத்துள்ளார். இதற்காக அவர் ஒரு வருடம் செலவழித்ததாக கூறப்படுகிறது. 60 முதல் 70 கி.மீ வேகத்தில் ஓடும் இந்த ஜீப்பை உருவாக்க அவருக்கு 1.5 லட்சம் செலவானது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.