Kerala man demolishes shop using JCB : சமீபத்தில் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் பார்த்த அனைவருக்கும் இது என்னவென்று நன்றாக தெரியும் என்று தான் கூற வேண்டும். ப்ரித்வி மேல் இருக்கும் கடும் கோபத்தினை வெளிகாட்ட, வில்லனின் வீட்டை பிஜூ மேனன் ஒரு ஜே.சி.பி. இயந்திரம் வைத்து நொறுக்கி தள்ளிவிட்டு செல்வார். அப்படி தான் கேரளாவில் இந்த நபர் இபப்டி ஒரு காரியத்தை செய்துள்ளார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் சேருப்புழாவில் இருக்கும் ஆல்பின் என்பவர் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத்திற்கு புறம்பாக மது விற்று வரும் கேளிக்கை விடுதி ஒன்றை நொறுக்கியுள்ளார். இப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களாகிய நாங்கள் இதனால் பெறும் பாதிப்பிற்கு ஆளானோம் என்று அவர் வீடியோ வேறு வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் பார்த்தது போன்று நிஜத்தில் செய்தால் பிஜூ மேனனாக இருந்தாலும் காவல்துறை தன் கடமையை செய்யும் என்பதை அவருக்கு யாரும் நினைவூட்டவில்லை போல. அவரை கைது செய்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது கண்ணூர் காவல்துறை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil