New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/16/bullet-2025-07-16-20-41-09.jpg)
"இது உங்களுக்காகத் தான் அப்பா".... மகனின் அன்பில் நெகிழ்ச்சியடைந்த தந்தை!
தந்தையின் நெகிழ்ச்சியான உணர்வுகளை காட்சிப்படுத்திய வைரல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டு, இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
"இது உங்களுக்காகத் தான் அப்பா".... மகனின் அன்பில் நெகிழ்ச்சியடைந்த தந்தை!
"எனக்கில்லை, என்னுடையதல்ல... இது அப்பாவுக்காகத் தான்!"... கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த கண்டெண்ட் கிரியேட்டர் அஸ்வின் என்ற இளைஞர், புதிய ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளை தனது தந்தைக்குப் பரிசளித்தபோது நெகிழ்ச்சியுடன் கூறிய வார்த்தைகள்தான் இவை. தனது தந்தையின் நெகிழ்ச்சியான உணர்வுகளை காட்சிப்படுத்திய இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டு, இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
14 ஆண்டுகால கனவும், மகனின் அன்பும்:
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அஸ்வின், அதனுடன் உருக்கமான குறிப்பையும் சேர்த்திருந்தார். "14 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு புல்லட் வாங்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். பல ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவர் ஒருபோதும் தனக்காக அதைச் செய்துகொள்ளவில்லை. இன்று, அவர் எப்போதும் விரும்பிய ஒன்றை, ஆனால் தனக்காக ஒருபோதும் பெறாத ஒன்றை நான் அவருக்குக் கொடுத்தேன். இது உங்களுக்காகத்தான், அப்பா" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவில், அஸ்வின் மோட்டார்சைக்கிள் சாவியைத் தனது தந்தையிடம் கொடுக்கிறார். அப்போது, பைக் தனக்காக வாங்கப்பட்டது என்று அறியாத தந்தை ஆச்சரியத்துடன் நிற்கிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மகனின் பரிசு தனக்குத் தான் என்று தெரிந்ததும், தந்தையும் தாயும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோய், பின்னர் மகனைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், அன்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
சமூக வலைத்தளங்களில் குவிந்த பாராட்டுக்கள்
இந்த உணர்வுப்பூர்வமான வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் அஸ்வினின் அன்பையும், தியாகத்தையும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். "அவரைப் போன்ற மகன்கள் ஒரு வரம். இன்றைய தலைமுறையில் இவரைப் போன்றவர்கள் அதிகமாக இருக்க வேண்டும்" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர், "நம் தலைமுறை குணமடைந்து வருகிறது, நம் பெற்றோர்களையும் குணப்படுத்த உதவுகிறது" என்று நெகிழ்ந்திருந்தார்.
"பெற்றோர்கள் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்திய விதம்" என்று ஒரு பயனர் குறிப்பிட்டிருந்தார். "இவ்வளவு அன்பு, அரவணைப்பு மற்றும் குணப்படுத்துதல்... இந்தத் தலைமுறை இவ்வளவு இளம் வயதிலேயே தங்கள் பெற்றோர்களுக்குப் பரிசளிக்கிறது" என்று இன்னொரு பயனர் வியந்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.