வண்டி நம்பரில் என்ன இருக்கிறது? என சாதாரணமாக நம்மைப் போல் கடந்து செல்ல முடியாதவர் கே.எஸ். பாலகோபால். ஏனெனில் அதில் அவருக்கு நிறைய இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், போர்ஷே கார் கம்பனியிலிருந்து தான் வாங்கியிருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவதற்காக ரூ.31 லட்சம் பணத்தை செலவு செய்திருக்கிறார்.
கேரளாவின் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் இதற்கான ஏலம் நடந்தது. அதில் பார்மஸி விநியோகஸ்தரராக இருக்கும் பாலகோபால், KL-01CK-1 என்ற பதிவெண்ணை ரூ.31 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருக்கிறார். அதோடு வெளிநாட்டிலிருந்து இந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை இறக்குமதி செய்ய ரூ.1 கோடி செலவு செய்திருக்கிறார் பாலகோபால்.
தவிர, ரூ.1 லட்சம் செலவில் KL-01CK-1 என்ற எண்ணை பதிவும் செய்திருக்கிறார். ”இந்த மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஃபேன்ஸி நம்பருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தது, பாலகோபால் தான்” என்கிறார்கள் கேரள போக்குவரத்து அதிகாரிகள்.
ஆடம்பர காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவதில் கேரளாவில் பல ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார் பாலகோபால். 2017-ல் டொயாட்டோ லேண்ட் க்ரூஷியர் காருக்கு KL-01CB-01 என்ற ஃபேன்ஸி நம்பர் வாங்குவதற்காக ரூ.19 லட்சம் செலவு செய்திருக்கிறார்.
“நம்பர் அடிக்ஷன்” என்பது எனக்கு சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. அதற்காக செலவு செய்வதற்கு ஒருபோதும் நான் வருத்தப்பட்டதே இல்லை என இதற்குக் ‘கூலாக’ பதிலளிக்கிறார் இந்த ஃபேன்ஸி நம்பர் பிரியர்!