/tamil-ie/media/media_files/uploads/2019/12/New-Project-2019-12-29T213951.313.jpg)
kerala couple their 60's fell in love at old age home, கேரளா முதியோர் இல்லத்தில் திருமணம், 65 வயதில் காதலித்து திருமணம் செய்துகொண்ட முதியவர்கள், kerala couple fell in love in old age home, thrissur, trending, Tamil indian express news
கேரளாவில் அரசு முதியோர் இல்லத்தில் இருந்த 60 வயதுகளில் உள்ள இருவர் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகிவருகிறது.
kerala couple their 60's fell in love at old age home, கேரளா முதியோர் இல்லத்தில் திருமணம், 65 வயதில் காதலித்து திருமணம் செய்துகொண்ட முதியவர்கள், kerala couple fell in love in old age home, thrissur, trending, Tamil indian express news
கேரளாவில் அரசு முதியோர் இல்லத்தில் இருந்த 60 வயதுகளில் உள்ள இருவர் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மாபுரம் பகுதியில், அரசு முதியோர் இல்லம் உள்ளது. இங்கு தங்கியுள்ள கோச்சானியன் மேனன்(67), லட்சுமி அம்மாள்(65) ஆகிய இருவரும் மனதார காதலித்து திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். இதனால், கேரள அரசு முதியோர் இல்லம் திருமண விழாக்கோலம் பூண்டது.
திருச்சூரைச் சேர்ந்த லட்சுமி அம்மாள். அவரது கணவர் மறைந்து 21 ஆண்டுகள் ஆகின்றன. லட்சுமியின் கணவரின் உதவியாளராக இருந்தவர்தான் இந்த கோச்சானியன். கணவர் மறைவுக்கு பிறகு லட்சுமி அம்மாளை கோச்சானியன்தான் கவனித்து வருகிறார். லட்சுமியின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது, மனைவியை கவனித்துக் கொள்ளுமாறு கோச்சானியனிடம் கூறிவிட்டு இறந்தார். அதற்குப்பிறகு, கோச்சானியன்தான் லட்சுமி அம்மாளை கவனித்து வந்துள்ளார்.
Marriage ceremony; Kochaniyan Menon, 66, and Lakshmi Ammal, 65, the couple, who met and fell in love at the old age home in Thrissur, got married on Saturday. #Kerala #oldage #home #LoveStory @NewIndianXpress pic.twitter.com/BbNUbCE7te
— P Ramdas (@PRamdas_TNIE) December 28, 2019
இந்த நிலையில், லட்சுமி அம்மாள் தனது 20 ஆண்டு கால நண்பர் கோச்சாணியனை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அரசு முதியோர் இல்லம் இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது.
கோச்சானியன் - லட்சுமி அம்மாள் திருமணம் நடைபெற்றது. 60 வயதுகளில் உள்ள இருவர் திருமணம் செய்துகொண்ட இந்த நெகிழ்ச்சியான விழாவில் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.