scorecardresearch

போலீஸ்காரர் சீருடையில் வந்து அமர்ந்த தேன்சிட்டு; கேரள காவல்துறை வெளியிட்ட அழகான வீடியோ!

viral video: ஒரு போலீஸ்காரரின் சீருடையில் தேன்சிட்டு குருவி வந்து அமர்ந்திருக்கிறது. அந்த பறவைக்கு போலீஸ்காரர் பூவில் இருக்கும் தேனைக் கொடுக்கிறார். கேரள காவல்துறை பகிர்ந்துள்ள இந்த அழகான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Kerala Police viral video, bird sits on a policeman’s uniform, போலீஸ்காரர் சீருடையில் வந்து அமர்ந்த தேன்சிட்டு; கேரள காவல்துறை வெளியிட்ட அழகான வீடியோ, வைரல் வீடியோ, tiny crimson-backed sunbird, Tamil indian express
போலீஸ்காரர் சீருடையில் வந்து அமர்ந்த தேன்சிட்டு

viral video: ஒரு போலீஸ்காரரின் சீருடையில் தேன்சிட்டு குருவி வந்து அமர்ந்திருக்கிறது. அந்த பறவைக்கு போலீஸ்காரர் பூவில் இருக்கும் தேனைக் கொடுக்கிறார். கேரள காவல்துறை பகிர்ந்துள்ள இந்த அழகான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு போலீஸ்காரரின் சீருடையில் தேன்சிட்டு குருவி பறவை அமர்ந்திருப்பதைக் காட்டும் அழகான வீடியோவை கேரள காவல்துறை பகிர்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், போலீஸ்காரர் பறவைக்கு பூவில் இருக்கும் தேனைக் கொடுக்கிறார். ஆனால், தேன்சிட்டுக் குருவி கொஞ்சம் ஆர்வமாக இருக்கிறது. இந்த வீடியோவில் உள்ள தேன்சிட்டுக் குருவி தென்னிந்தியாவின் மிகச்சிறிய பறவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “எதிர்பாராத விருந்தாளி சீருடையில் #கேரள போலீஸ் விசிலுக்கு பறந்தார்” என்று எழுதினார். மற்றொரு நபர், “ஆஹா என்ன ஒரு அதிர்ஷ்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அன்பான கருத்துகளைத் தவிர, சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்ட இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த சிலர், காவல்துறயின் மக்கள் விரோத நடத்தைக்காக பலர் காவல்துறையை விமர்சித்தனர். இந்த கருத்தை எதிரொலித்து, ஒரு ட்விட்டர் பயனர், “சில நேரங்களில் மனிதர்களிடம் கருணை காட்டுங்கள்” என்று எழுதினார். மற்றொரு நபர் கேலி செய்தார், “நீங்கள் போடும் பதிவுக்கும் உங்கள் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கேலிக்கூத்து வெறும் கேலிக்கூத்து.” என்று விமர்சித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது பணியை மீறி புறா ஒன்றின் உயிரைக் காப்பாற்றும் வீடியோ வைரலானது. போலீஸ்காரர் கம்பத்தின் மீது ஏறி பறவையைச் சுற்றியிருந்த நூலை அவிழ்த்தார். போலீஸ்காரருக்கு நன்றி சொல்லி, புறா பறந்து சென்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Kerala police shares beautiful video with a bird perched on a policemans uniform