கேரள மாநிலம், இடுக்கி அருகே கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில சிறப்பு உதவி ஆய்வாளர், மாரியம்மா.. மாரியம்மா… தமிழ் பக்திப் பாடலுக்கு டான்ஸ் வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், சாந்தன்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி. இவருடைய தலைமையில் கேரள போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த திருவிழாவில் தமிழ் பக்தி பாடலான “மாரியம்மா … மாரியம்மா …” என்ற பாடல் ஒலித்தபோது, சீருடையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி பக்தி பரவசத்தில் அந்த பாடலுக்கு ஏற்ப சாமியாட்டம் ஆடினார். அப்பகுதியில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் எஸ்.ஐ.-யின் ஆட்டத்தைப் பார்த்து ரசித்து ரசித்தனர்.
கேரளாவில் சிறப்பு உதவி ஆய்வாளர், மாரியம்மா.. மாரியம்மா… தமிழ் பக்திப் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து முன்னாள் டி.எஸ்.பி தலைமையில் நடத்திய விசாரணையில் உதவி ஆய்வாளர் பணி நேரத்தில் மது அருந்தி விட்டு குடி போதையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறந்து சாமி ஆட்டம் போட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, எஸ்.ஐ. ஷாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போலீஸ் சீருடையில் உதவி ஆய்வாளர் சாமி ஆடிய வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.