New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/ho7hi0Cf3PHDPUuSxiqh.jpg)
பெட்ரோல் நிரப்பிய மறுநொடி... பறந்துவந்த நாசில் பைப் - பங்க் ஊழியருக்கு நேர்ந்த சோகம்!
கேரள மாநிலம் திருச்சூரில், கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் பெட்ரோல் பங்க் நாசிக் பைப் ஊழியரின் தலையில் பறந்துவந்து விழுந்தது. இதில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
பெட்ரோல் நிரப்பிய மறுநொடி... பறந்துவந்த நாசில் பைப் - பங்க் ஊழியருக்கு நேர்ந்த சோகம்!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கார் ஒன்று வந்து உள்ளது. பெட்ரோல் போட்ட பிறகு காரின் பெட்ரோல் டேங்க்கில் இருந்து நாசில் பைப் எடுக்கப்படாத நிலையில், அதனை கவனிக்காமல் காரை வேகமாக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதில், நாசில் பைப்பில் சிக்கிய பங்க் ஊழியர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை புதுக்காடு புலிக்கன் பெட்ரோல் பங்க்கில் நடந்தது.
காயமடைந்தவர் செங்களூர் முல்லக்கரா நகரைச் சேர்ந்த தேவசி (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலையில் படுகாயமடைந்த தேவசி திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் பெட்ரோல் நிரப்பியபோது, தேவாசி கார் டிரைவரிடம் பணம் வாங்கினார். இந்த நேரத்தில் காருடன் இணைக்கப்பட்ட நாசில் பைப் எடுக்கப்படவில்லை. இதை கவனிக்காமல் டிரைவர் காரை முன்னோக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். கார் நகர்வதைப் பார்த்த தேவசி விரைந்து சென்று நாசில் பைப் எடுக்க முயன்றபோது, திடீரென பறந்துவந்த இரும்பு நாசில் பைக் ஊழியரின் தலையில் மோதியது. இதில், நிலைகுலைந்த ஊழியர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
തൃശൂർ പുതുക്കാട് പെട്രോൾ പമ്പിൽ ഇന്ധനം നിറക്കുന്നതിനിടെ മുന്നോട്ടെടുത്ത കാറിന്റെ ഇന്ധന ടാങ്കിൽ വെച്ചിരുന്ന നോസിൽ തലയിൽ വന്നിടിച്ച് ജീവനക്കാരന് ഗുരുതര പരിക്ക്#Accident #PetrolPump #Puthukkad pic.twitter.com/GU9mA2FS7T
— Asianet News (@AsianetNewsML) May 23, 2025
உடனடியாக அங்கிருந்த மற்ற ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து காட்சிகள் பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.