பக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இருக்கிறார்களே எப்படி செல்வது?

கேரளாவில் கோவில் விழாவின் போது கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆம்புலன்சுக்கு வழிவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Kerala viral video :

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலில் ஆண்டுந்தோறும் மன்னர்காட் பூரம் என்ற சிறப்பு மிக்க திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவில் கலந்துக் கொள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் தவறாமல் வந்து விடாவார்கள். ஆடல், பாடல், பக்தி, செண்டா மேளம் என பிரம்மாண்ட நடைபெறும் இந்த திருவிழா கேரளாவில் ரொம்ப ஃபேமஸ்,

இந்தாண்டு இந்த திருவிழா நேற்று முன் தினம் தொடங்கியது. வழக்கத்தை போல இந்தாண்டும் களைக்கட்டியது. அதே நேரம் இந்த திருவிழாவில் நடந்த நெகிழ்ச்சி மிக்க சம்பவம் ஒன்று கேரளா சேட்டன்களை மீண்டும் கொண்டாட வைத்துள்ளது.

திருவிழா அன்று, . கேரளாவுக்கே உரிய இசைக் கதம்பங்களுடன் விமரிசையாக நடனமாடி மக்கள் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். திருநங்கைகள், இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் என அனைவரும் திரளாக சேர்ந்து பக்தி பரசவத்தில் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் கேட்டது அந்த சத்தம். திரும்பி பார்த்தால் ஆம்புலனஸ். உயிரின் ஒலியைச் சுமந்துகொண்டு, ஒலியை எழ்ப்பியபடி ஆம்புலனஸ் ஓட்டுநர் அந்த தெருவில் நுழைகிறார். நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இருக்கிறார்களே எப்படி செல்வது? என்ற பயத்துடன் ஓட்டுநர் வாகனத்தை மெல்ல மெல்ல நகர்த்துகிறார்.

பக்தியில் ஆடிக் கொண்டிருந்த அனைவரும் அந்த கணம் சுதாரிக்கின்றனர்.அவசரத்தேவை, ஆம்புலனஸ் சத்தம் கேட்கிறது என்ன செய்யலாம்? உடனே நொடிப்பொழுதில் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழியினை மனிதச் சங்கிலி அமைத்தது போல் உருவாக்கி ஒரு உயிரை காப்பாற்ற உதவுகின்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

உயிரின் வழி என்பதை உணர்ந்து அவ்வுயிருக்கு மதிப்பு கொடுத்து விலகிய உன்னதமான கேரள மக்களின் உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close