Advertisment

வயநாடு நிலச்சரிவு: புகழ்பெற்ற மரப்பாலம் நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் எப்படி இருக்கு பாருங்க; வைரல் வீடியோ

பல இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பயனர்கள் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் அழிவைக் காட்டும் வீடியோக்களையும், நிலச்சரிவுக்கு முன், வயநாடு மாவட்டம் எவ்வளவு அழகாக இருந்தது என்பதைக் காட்டும் இதற்கு முன் பதிவு செய்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
wayanad landslide

நிலச்சரிவுக்கு முன், வயநாடு மாவட்டம் எவ்வளவு அழகாக இருந்தது என்பதைக் காட்டும் நிலச்சரிவுக்கு முன் பதிவு செய்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

பல இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பயனர்கள் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் அழிவைக் காட்டும் வீடியோக்களையும்,  நிலச்சரிவுக்கு முன், வயநாடு மாவட்டம் எவ்வளவு அழகாக இருந்தது என்பதைக் காட்டும்  நிலச்சரிவுக்கு முன் பதிவு செய்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Wayanad landslides: Videos showing famous wooden bridge, landscape before and after go viral

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்கிழமை அதிகாலை தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை, 200-க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், சமூக ஊடக தளங்களில், வயநாட்டில் நிலசரிவால் ஏற்பட்ட அழிவைக் காட்டும் வீடியோக்கள் மற்றும் இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்கள், வயநாட்டின் அழகைக் காட்டுகின்றன. கண்டெண்ட் கிரியேட்டர் முஹம்மது ரஷீத் டி.பி-யால் பகிரப்பட்ட ஒரு வீடியோ, இன்ஸ்டாகிராமர்கள் மத்தியில் பிரபலமான முண்டக்கை பகுதியில் உள்ள புகழ்பெற்ற மரப்பாலத்தைக் காட்டுகிறது. இந்த மரப்பாலம் ஆறு மாதங்களுக்கு முன்பு படம்பிடிக்கப்பட்டது. அந்த மரப்பாலம் நிலச்சரி இருந்த இடம் தெரியாமல் போன அழிவை அந்த வீடியோ காட்டுகிறது.

“தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் வயநாடுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், கேரளாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று ரஷீத் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் ஒரு பயனர்,  “அழகான இடம் ஒரு நொடியில் இல்லாமல் போய்விட்டது” என்று எழுதினார். பல பயனர்கள் நிலச்சரிவில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராமில் ரெயின்போ மீடியா என்ற பக்கத்தில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோ, வயநாட்டின் முண்டக்கை பகுதியின் அழகிய நிலப்பரப்புகளின் ட்ரோன் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் நிலச்சரிவு அப்பகுதியில் உள்ள அனைத்தையும் எப்படி அழித்தது என்பதைக் காட்டுகிறது. “வயநாடு முண்டக்கையில் பெரிய அளவில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயநாட்டிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று எக்ஸ் பக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, அவர்கள் அப்போது செய்ததைப் போலவே, நிலச்சரிவால் அழிந்த வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். மேலும், இரண்டு நாள் அரசு துக்க நாட்களாக அறிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment