கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் வருங்கால கணவனை தேடும் வசதி ஏற்படுத்தி தந்தால் நன்றாக இருக்கும் என்று பெண் ஒருவர் ஷேர் செய்துள்ள போஸ்ட் வைரலாகியுள்ளது.
காதல் திருமணம், கலப்பு திருமணம், பெற்றோர்கள் பார்க்கும் திருமணம் இவையெல்லாம் கடந்து இப்போது ஃபேஸ்புக் மூலம் திருமணம் செய்யும் வசதி வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் கேரள பெண். கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்த இந்த போஸ்ட் படு வைரல் ஆகியுள்ளது.
அதுலையும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கே, இந்த வசதியை ஏற்படுத்தி தந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பெண் கூறியது அடி தூள் தருணம் தான். இதுவரை இந்த போஸ்ட்டை 6000 பேர் ஷேர் செய்துள்ளனர். கூடவே, ஜோதிக்கு கல்யாண புரோபசலும் செய்துள்ளனர்.
https://www.facebook.com/photo.php?fbid=984532265031900&set=a.124945704323898.27265.100004254067571&type=3&theater
ஜோதி வெளிட்டிருக்கும் அந்த பதிவில் கூறியிருப்பது, “ என் பெயர் ஜோதி. வயது 28. திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடி வருகிறேன். இணையதளங்கள் மூலம் வாழ்க்கை துணையை தேடுவது மிகவும் சிரமமாக உள்ளது. அதற்கு பதிலாக பேஸ்புக் மூலம் தேடுவது எளிதாக உள்ளது. அதனை மேலும் எளிதாக்க பேஸ்புக்கில் புதிய மாற்றம் கொண்டு வர வேண்டும். என்வே, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் இதை கருத்தில் கொண்டு அதற்கான முயற்சியை ஃபேஸ்புக்கில் விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும். என் நண்பர்கள் வட்டாரத்தில் எனக்கேற்ற மணமகன் குறித்து யாருக்கேனும் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.
இத்துடன் ஜோதி தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜாதக பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன், கேரள ஊடகங்களிலும் ஜோதியின் போஸ்ட் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக் மூலம் வரன் தேடும் போது ஜாதி, ஜாதகம் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலோனோர் வெளியில் வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.