கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் பல நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. இந்த பொது முடக்க காலத்தில் சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
இந்த பொது முடக்க காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சென் தனது சமூக ஊடக பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில், கெவின் பீட்டர்சென், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த “ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக புடிச்சிக்கோ” என்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசிஅயில் 1993 ஆம் ஆண்டு வெளியான ஜெண்டில்மேன் படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல், அப்போது சூப்பர் ஹிட் ஆனது. தற்போது, கெவின் பீட்டர்சென் அந்த பாடலுக்கு டிக்டாக் செய்ததன் மூலம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.