K.G.F: Chapter 2′ movie review tamil memes: கன்னட நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இந்தியா முழுதும் பிரமாண்ட வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நிலவிய கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், இன்று உலகம் முழுதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்.

கே.ஜி.எஃப் – 2 படம் இன்று காலை முதல் காட்சியாக வெளியான நிலையில், படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு அதிகளவிலான ரசிகர்கள் குவித்து இருப்பதாகவும், தங்களின் எதிர்பார்ப்பை 100% மேல் பூர்த்தி செய்துள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கே.ஜி.எஃப் – 2 படத்தை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் படம் குறித்த தங்களின் கருத்தை மீம்ஸ்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர். இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தை கலக்கும் ‘கே.ஜி.எஃப் – 2 ரிவ்யூ’ மீம்ஸ்:














இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
சமூக வலைதள பக்கங்களில் அதிமாக பகிரப்பட்டு இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.







“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“