ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காணொலி காட்சியை நடிகை குஷ்பூ அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் பேசியதாவது : “ முதலில் யாரிடம் கட்டுப்பாடான அமைப்பு இருக்கிறதோ, அவர்கள்தான் வெற்றிபெற முடியும். இன்றைக்கு அவர்களது வாக்குச்சாவடி ஏஜெண்டுகளாக 7 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் கிடையாது. அனைவரும் ஆர். எஸ். எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் சாதாரணமாக சைக்கிகளில் வருகிறார்கள்.
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கட்சி பணிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு மதுபானம், பிரியாணி தேவையில்லை. இதெல்லாம் கொடுக்காமல் அவர்கள் பணி செய்கிறார்கள். அவர்கள் கொள்கைக்காக வருகிறார்கள். நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வெறும் சத்திரம் போல் அல்லது சந்தைக்கடை போல் ஒன்றை நடத்திக்கொண்டு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.
பாஜகவின் 2024- தேர்தல் வெற்றிக்கு இதுவே சாட்சி என்று பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.