கிகி சேலஞ்ச் நம்ம ஊர் ஸ்டைல் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் இளைஞர்களின் கலக்கும் வீடியோ

Kiki Challenge : வெளிநாடு முழுவதும் பிரபலமாகி இந்தியாவிற்குள் ஊடுருவிய கிகி சேலஞ்ச் மிகவும் ஆபத்தானது என்று காவல்துறை எச்சரித்து வரும் நிலையில், ஆபத்தில்லா கிகி சேலஞ்ச் வீடியோ வைரலாகியுள்ளது.

Kiki Challenge : உலகம் முழுவதும் பிரபலமான கிகி சேலஞ்சின் தமிழ்நாடு வெர்ஷன்:

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பிரபலம் அடைந்துள்ளது இந்த கிகி சேலஞ்ச். இதனை ஹாலிவுட், பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் செய்து வருகின்றனர்.

kiki challenge

கிகி சேலஞ்சுக்கு நடனம் ஆடிய நடிகை ரெஜினா

ஓடும் காரில் இருந்து இறங்கி, கிகி டு யூ லவ் மி என்ற பாடலுக்கு ஆட வேண்டும். பிறகு அதே ஓடும் காரில் நடனம் ஆடி முடித்த பின்னர் ஏற வேண்டும். இதனை பலரும் முயற்சித்து வருகின்றனர். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் விபத்துக்குள்ளாகினர். எனவே இது மிகவும் ஆபத்தானது என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

கிகி சேலஞ் இவ்வளவு ஆபத்தா? எச்சரிக்கும் போலீஸ்… உஷார் இளைஞர்களே!

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இந்த சாவாலை ஏற்றுக் கொண்டு, கிகி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுவரை ஆபத்துகள் மட்டுமே நிறைந்த அளவுக்கு நடைபெற்ற இந்த சவாலை திசை திருப்பி, விவசாய நிலத்தில், மாடு ஓட்டிக்கொண்டே நடனம் ஆடுகின்றனர். ஆபத்து இல்லாமலும் சவால்களை கொண்டாடலாம் என்பதற்காக சிறந்த எடுத்துக்காட்டு இந்த இளைஞர்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close