New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/hen-and-cobra.jpg)
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் வளர்ப்பு கோழி ஒன்று கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை விரட்டிய வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் வளர்ப்பு கோழி ஒன்று கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை விரட்டிய சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள எருமபாறை மலைவாழ் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட காடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை ஆகிய வனவிலங்கு அடிக்கடிவந்து செல்லும்.
பொள்ளாச்சி டாப்ஸ்லிப்: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜ நாகம்; தடுத்து நிறுத்திய வளர்ப்பு கோழி; வீடியோ pic.twitter.com/RBrUB5nGFm
— Indian Express Tamil (@IeTamil) August 16, 2022
இந்நிலையில் எருமைபாறை வன கிராமத்திற்குள் கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, அங்கே மலைவாழ் மக்களால் வளர்க்கப்படும் கோழி ராஜநாக பாம்பை அப்பகுதிக்குள் உள்ளே நுழைய விடாமல் நீண்ட நேரம் போராடி தடுத்து வனப்பகுதிக்குள் அனுப்பியது. இதைக் கண்ட அப்பகுதி மலைவாழ் மக்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். அப்போது பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: பி. ரஹ்மான், கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.