ஆள் உயரத்திற்கு சீறிய ராஜநாகம்: பாம்பு பிடித்தவர் மிரண்ட வீடியோ
எல்லோரும் பார்த்து பயப்படும் பாம்பை, அசால்ட்டாக பிடித்து கெத்து காட்டும் பாம்பு பிடிப்பவரை, ஒரு ராஜநாகம் ஆள் உயரத்திற்கு சீறி எழுந்து பயமுறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், இந்த பாம்பு பிடிப்பவர்கள் மட்டும் கொடிய விஷம் கொண்ட பெரிய பெரிய பாம்பை எல்லாம் நாய்க்குட்டி பிடிப்பதைப் போல அனாயசமாக பிடித்து கெத்து காட்டுவார்கள். ஆனால், ஒரு ராஜநாகம் ஆள் உயரத்திற்கு சீறி எழுந்து பாம்பு பிடிப்பவரை பயமுறுத்தி இருக்கிறது.
Advertisment
அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீலம் கொண்ட ஒரு மிகப் பெரிய ராஜகநாகம் பாம்பு நுழைந்துவிட்டது. இதையடுத்து, பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் மைக் ஹோல்ஸ்டன் அந்தப் பகுதிக்கு சென்று, அந்த ராஜநாகத்தை நைசாகப் பிடித்துள்ளார். பின்னார், அந்த பாம்பை ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில், பெட்டிக்குள் அடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராஜநாகம் திடீரென கோபம் அடைந்து ஆள் உயரத்திற்கு சீறி எழுந்து பாம்பு பிடிப்பவை பயமுறுத்தியுள்ளது.
பாம்பு பிடிப்பதில் கில்லாடியான மைக் ஹோல்ஸ்டன் திடீரென ராஜநாகம் ஆள் உயரத்திற்கு தலையைத் தூக்கி சீறியதைப் பார்த்து ஒரு நொடி ஆடிப் போய்விட்டார். ஆனாலும், சுதாரித்துக்கொண்டு அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்.
பாம்பு பிடிப்பவரான மைக் ஹோல்ஸ்டன் ராஜநாகத்தை பிடிக்கும்போது சீறி எழுந்து பாம்பு பிடிப்பவரையே மிரட்டிய விடீயோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ராஜநாகம் பாம்பு மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு. இது மிக அரிதாகத்தான் மனிதர்களின் கண்களில் படும். கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ராஜநாகம் பாம்பு மற்ற பாம்புகளைவிட மிகவும் கொடிய விஷம் கொண்டது. ராஜநாகம் கடித்தால் உரிய நேரத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியான, ராஜநாகம் சீறி எழுந்தால், பாம்பு பிடிப்பவர் மட்டும் பயப்படாமல் இருப்பாரா என்ன?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”