அது என்ன விளையாட்டு பொம்மையா? ராஜநாகத்தை கொடுமை செய்த குரூர மனிதர்கள்!

இந்த ஊர்வன இனங்களுக்கு துன்புறுத்தல் தரும் வகையில் நடந்து கொண்டால் மூன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் வரையில் அபராதமும் விதிக்கப்படும்

viral video, trending video

King cobra trending viral video : வன உயிரினங்கள் என்றால் வெறும் யானையும், புலிகளும் மட்டும் இல்லை. சிறு சிறு பட்டாம்பூச்சிகள் முதற்கொண்டு, தவளைகள், ஓணான்கள், பாம்புகள் மற்றும் இன்னபிற ஊர்வனங்களும் சேர்ந்தது தான் வனம். வனம் பற்றிய புரிதல்கள் மனிதர்களுக்கு இல்லாமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பர்வீன் தபாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஒன்றில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ராஜநாகம் ஒன்றை இரு நபர்கள் துன்புறுத்தும் காட்சி பெறும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் ஓரமாக உள்ள வனத்தில் இருந்து இழுத்து வரப்படடும் ராஜநாகத்தை, ப்ளாஸ்டிக் சாக்குப் பையில் வைத்து அடைத்து, அதன் உடலில் ஏறி மிதிக்கும் காட்சிகள் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. கோவாவில் நடைப்பெற்ற இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அம்மாடியோவ்… பார்த்ததும் மூச்சடைக்க வைக்கும் ராஜநாகம்! வைரலாகும் வீடியோ

மக்களுக்கு வனம் குறித்தும் வன விலங்குகள் குறித்தும் போதுமான விழிப்புணர்வை வழங்குவது அவசியம் என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த ராஜநாகம் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அதனை துன்புறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

King Cobra, Monocled Cobra, Spectacled Cobra and Russell’s Viper போன்ற பாம்புகள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 இன் அட்டவணை II இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஊர்வன இனங்களுக்கு துன்புறுத்தல் தரும் வகையில் நடந்து கொண்டால் மூன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் வரையில் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: King cobra trending viral video two men held for assaulting king cobra

Next Story
Viral Video : சாப்பாட்ட அடிச்சுக்காம எப்டி பிரிச்சு சாப்ட்றதுன்னு எங்ககிட்ட இருந்து கத்துக்கங்க ஃப்ரெண்ட்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com