பிரபஞ்சம் ஓம் என்று சொல்வதாக நாசா பதிவு செய்துள்ளது என இணையத்தில் உலவும் ஒரு போலி வீடியோவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஒவ்வொரு நாளும் பல போலி தகவல்களைக் கூறும் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அந்த வீடியோ கூறும் தகவல் உண்மையா, பொய்யா என்று தெரிந்துகொள்ளாமல் பலரும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பகிர்ந்து பிறரின் கிண்டலுக்கும் கேலிக்கு ஆளாவார்கள்.
இப்படி பொய்யான தகவல்களைக் கூறும் போலி வீடியோக்களை பொது அறிவு இல்லாதவர்கள், அதன் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ள முடியாதவர்கள் பகிருந்திருந்தால் அதை கடந்துபோய்விடலாம். ஆனால், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, பிரபஞ்சம் ஓம் என்று சத்தத்தை எழுப்புவதாகவும் அதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பதிவு செய்ததாகவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Kiran Bedi (@thekiranbedi) January 4, 2020
கிரண் பேடி இந்த வீடியோவைப் பகிர்ந்ததைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து டுவிட் செய்ததால் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
If she can clear the UPSC exam then even you can. What's your excuse? https://t.co/yPVPCBHgLE
— Aryan Srivastava (@aryansrivastav_) January 4, 2020
ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், துணைநிலை ஆளுநராக இருப்பவர் இப்படி போலி தகவல்களைக் கூறும் மூடநம்பிக்கைகளை பரப்பும் வீடியோக்களை பகிரலாமா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.