Advertisment

காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடியை துணிச்சலாக காப்பாற்றிய வீரப் பெண்; வைரல் வீடியோ

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக்கொண்ட கோலா கரடியை ஒரு துணிச்சலான பெண் மீட்டார். அந்த வீடியோ உலக அளவில் வைரல் ஆனது. காட்டுத் தீயில் இருந்து மீட்கப்பட்ட கோலா கரடி தீக்காயங்கள் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
australia, nsw, forest fire, bushfire, koala, கோலா, காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடி மீட்பு, கோலா கரடியை துணிச்சலாக மீட்ட பெண், viral video, port macquarie koala hospital, viral news, Tamil indian express

australia, nsw, forest fire, bushfire, koala, கோலா, காட்டுத் தீயில் சிக்கிய கோலா கரடி மீட்பு, கோலா கரடியை துணிச்சலாக மீட்ட பெண், viral video, port macquarie koala hospital, viral news, Tamil indian express

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக்கொண்ட கோலா கரடியை ஒரு துணிச்சலான பெண் மீட்டார். அந்த வீடியோ உலக அளவில் வைரல் ஆனது. காட்டுத் தீயில் இருந்து மீட்கப்பட்ட கோலா கரடி தீக்காயங்கள் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீயில் கரடி இனத்தைச் சேர்ந்த கோலா கரடி சிக்கிக்கொண்டது. இதனைப் பார்த்த டோஹெர்தி என்ற பெண் துணிச்சலாக செயல்பட்டு அந்த கோலா கரடியை தீயிலிருந்து காப்பாற்றினார். ஆனால், கோலாவின், கால்கள், மார்பு ஆகிய பகுதி பெரிய அளவில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.

https://www.facebook.com/9NewsSydney/videos/757479437998269/

இதையடுத்து, அவர் அந்த கோலா கரடியை, கோலா மருத்துவமனையில் சேர்த்தார். அங்கே மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

காட்டுத் தியில் இருந்து மீட்கப்பட்ட 14 வயதான கோலாவை டோஹெர்தி மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் பார்த்தார். அந்த கோலா கரடிக்கு அவருடைய பேரக்குழந்தையின் பெயரான எலன்பரோ லூயிஸ் என பெயரிடப்பட்டது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

ஆனால், கோலா கரடியின் தீக்காயம் மோசமானது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம், “இன்று நாங்கள் எலன்பரோ லூயிஸை தூங்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன் தீக்காயங்கள் எப்படி இருக்கிறது என்று அறிவதற்கும் கட்டுகளை மாற்றுவதற்கும் இன்று காலை அதற்கு மயக்க மருந்து கொடுத்தோம்”என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

மருத்துவமனை நிர்வாகத்தின் மற்றொரு பதிவில், “நாங்கள் சமீபத்தில் ஏற்கெனவே தெரிவித்தபடி, தீக்காயங்கள் நன்றாக ஆறிவருவதற்கு முன்பு மோசமாகிவிடும். எலன்பரோ லூயிஸின் விஷயத்திலும் தீக்காயங்கள் மோசமாகிவிட்டன. துரதிர்ஷ்டவசமாக அது நன்றாக ஆறிவரவில்லை”என்று ஃபேஎஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவில் விலங்கு அனுபவித்த தீக்காயங்களின் தீவிரத்தை மருத்துவமனை நிர்வாகம் விளக்கியதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளும் மருந்துகளும் வழங்கப்பட்ட போதிலும் அது ஏன் ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை விளக்கினர்.

மருத்துவமனை நிர்வாகம் கோலா பற்றி தொடர்ந்து தகவல்களைப் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவந்தது. அதில், “இப்போது லூயிஸ் தீக்காயங்கள் கண்காணிப்பு பிரிவில் இருக்கிறது. அதனுடைய நிலைமை குறித்து நிச்சயமில்லை. அதன் காயங்களும் வலியும் சிகிச்சையளிக்க முடியாதவை மற்றும் தாங்கமுடியாதவை என்று நாங்கள் உணர்ந்தால், நாங்கள் அதை தூங்க வைப்போம். ஏனெனில், அதுதான் மிகச் சிறந்த காரியமாக இருக்கும்” என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

“கோலா மருத்துவமனையில் நாங்கள் கோலாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மட்டும் கோலாக்களை உயிருடன் வைத்திருப்பதில்லை. அது தீக்காயங்களால் அதிகப் பட்ச வலியுடன் இருக்கிறது என்றால் நாம் அனைவரும் முதன்மையாக அந்த விலங்கின் நலனைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும்” என்று மருத்துவமனை தெரிவித்தது.

கோலாவின் மறைவு குறித்து பலர் துக்கம் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் மருத்துவமனையின் முடிவை ஆதரித்தனர்.

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து காட்டுத் தீ சம்பவஙக்ள் நடைபெற்றுவருகிறது. சமீபமாக சில வாரங்களில் நூற்றுக்கணக்கான கோலாக்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், இப்போது கோலா இனம் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Viral Social Media Viral Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment