கொடைக்கானலில் வெடித்த யூனிலீவர் நிறுவனத்தின் சர்ச்சையை மீண்டும் உலகறிய செய்ய கர்நாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா, ராப்பர் , சோஃபியா அஷ்ரஃப் ஆகியோர் இணைந்து ‘கொடைக்கானல் ஸ்டில் வோண்ட்’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர்.
சர்ச்சைக்கு இடமாகி கொடைக்கானலில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, அப்பகுதி மக்களை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனையை உலகறிய செய்யும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ராப் பாடகி சோஃபியா அஷ்ரஃப் பாடிய ‘கோடைக்கானல் வோன்ட்’ இணையத்தை பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது.
இந்த விழிப்புணர்வு பாடல் ஏற்படுத்திய தாக்கம் இணையவாசிகள் நன்கு அறிவார்கள். அதன் பின்பு, பாதரச ஆலை இருந்த பகுதியில் மண்ணில் பாதரசக் கழிவு கலந்திருந்த விகிதம் பிரிட்டனில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவைப்போல 20 மடங்கு அதிகம் என்ற தகவல், யுனிலீவர் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே தெரிய வந்தது அந்த பாடலுக்கு கிடைத்த வெற்றி மட்டுமில்லை நாள் தோறும் பிரச்சனையை சந்திக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வரை முடிவுக்கு வராத கொடைக்கானல் பாதரச கழிவு சர்ச்சை மீண்டும் உருவெடுக்க ஆரம்பமாக டி.எம்.கிருஷ்ணா, ராப்பர் , சோஃபியா அஷ்ரஃப் , அமிர்த் ராவோ ஆகியோர் இணைந்து அடுத்த வெர்ஷனாக ‘கொடைக்கானல் ஸ்டில் வோண்ட்’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர். முந்தைய பாடல் போலவே இதிலும் கொடைக்கானல் சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனையை அதிரடியாக பாடல் வரி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.