scorecardresearch

கோடியக்கரை சரணாலயத்தில் காட்டுக் குதிரைகள்: ஒரு உயிரியல் பன்முக சொர்க்கம்: வீடியோ

viral video: இந்த வீடியோவை முழுமையாக நீங்களே பாருங்கள், பளிங்கு போன்ற தண்ணீரில் இருந்து காட்டுக் குதிரைகள் கரையேறுவது, சுற்றி பறவைகள் இருப்பது பார்க்கும்போது உண்மையில் பூமியில் ஒரு உயிரியல் சொர்க்கம்தான்.

Kodikkarai wildlife and bird sanctuary, Kodikkarai Bio Diversity paradise on earth video, point Calimere, கோடியக்கரை சரணாலயத்தில் காட்டுக் குதிரைகள், ஒரு உயிரியல் பன்முக சொர்க்கம்: வீடியோ - Kodikkarai wildlife sanctuary, Bio Diversity paradise on earth video
கோடியக்கரை சரணாலயத்தில் காட்டுக் குதிரைகள், ஒரு உயிரியல் பன்முக சொர்க்கம்: வீடியோ

viral video: மனிதர்கள் இயற்கையோடு இயைந்திருந்த காலத்தில், காடுகளை காப்புக் காடுகளாக அவசியம் இல்லாமல் இருந்தன. மனிதர்கள் எப்போது இயற்கையில் இருந்து விலகி, வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை ஆக்கிரமிப்பது, தந்தம், தோல், பல், எலும்புகளுக்காக வன விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினார்களோ அன்றே, காடுகளின் பரப்பு குறையத் தொடங்கியது. காடுகளில் வனவிலங்குகள் எண்ணிக்கை குறைந்து அரிதாகிவிட்டன.

அதற்கு பிறகுதான், உலக நாடுகள் இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது. வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டன. வன விலங்குகளைப் பாதுகாக்க சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் கோடியக்கரை சரணாலயம் முக்கியமான சரணாலயமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் பொதுவாக குதிரைகள் என்றாலே மனிதர்கள் வளர்ப்பது என்று அறியப்படும் நிலையில், கோடியக்கரை சரணாலயத்தில் காட்டுக் குதிரைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கோடிக்கரை அல்லது கோடியக்கரை (Point Calimere) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி. இது காலிமர் முனை அல்லது கள்ளி மேடு (Point Calimere)எனவும் அழைக்கப்படுகிறது.

காவிரி கழிமுகப்பகுதி கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது. இங்குள்ள சதுப்புநிலக் காடுகள்,வேதாரண்யம் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கிழக்கு தக்காணத்தின் உலர்பசுமை காடுகளில் எஞ்சியிருக்கும் பகுதி. கோடியக்கரை சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது.

இந்த கோடியக்கரை உயிரியல் பன்முக சொர்க்கம் என்று அழைத்துள்ள தமிழ்நாடு அரசின் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, பருந்துப் பார்வையில் பகிர்ந்துள்ள வீடியோவில் அங்கே காட்டுக் குதிரைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ், கோடியக்கரையில் தண்ணீரில் இருந்து காட்டுக்குதிரைகள் கரையேறும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். உன்மையில் கோடியக்கரை ஒரு உயிரியல் சொக்கம்தான்.

சுப்ரியா சாஹு இந்த வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் காலிமர் முனை உண்மையிலேயே பூமியில் ஒரு உயிரியல் பன்முக சொர்க்கமாகும். ராம்சர் தளமும் கூட அப்படித்தான். தமிழ்நாடு அரசு அதன் 17 பறவைகள் சரணாலயங்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பிளாக்பக்கின் மிகப்பெரிய மக்கள்தொகைகளில் ஒன்றான இந்த சரணாலயம் நரிகள், காட்டுக்குதிரைகள், கருப்பு துடைத்த முயல்கள் போன்றவற்றின் தாயகமாக உள்ளது. இந்த சீசனில் ஃபிளமிங்கோக்கள், பல வண்ண நாரைகள், பெலிகன்கள், கரண்டி மூக்கு பறவைகள், வாத்துகள், டீல்ஸ் போன்றவை உட்பட கிட்டத்தட்ட 90 வகையான வெளிநாட்டு நீர்ப்பறவைகளை கோடியக்கரை சரணாலயம் ஈர்க்கிறது.

இந்த வீடியோவை முழுமையாக நீங்களே பாருங்கள், பளிங்கு போன்ற தண்ணீரில் இருந்து காட்டுக் குதிரைகள் கரையேறுவது, சுற்றி பறவைகள் இருப்பது பார்க்கும்போது உண்மையில் பூமியில் ஒரு உயிரியல் சொர்க்கம்தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Kodikkarai wildlife and bird sanctuary bio diversity paradise on earth video