”கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோ” ஆர்டர் செய்தவருக்கு அமேசான் அனுப்பிய அதிர்ச்சி டெலிவரி!

ஆவலுடன் பார்சலை திறந்தவருக்கு இந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அமேசான்.

By: Updated: June 15, 2020, 11:27:38 AM

Kolkata man orders communist manifesto Amazon delivers Bhagavad Gita : ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது சில நேரங்களில் நாம் விரும்பாத பல தவறுகள் நிகழ்வது வழக்கம். இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை இருக்கும் நாட்டில் இது போன்ற தவறுகளும் குழப்பங்களும் தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனாலும் பாருங்களேன் கொல்கத்தாவில் சுதிர்த்தா தாஸ் என்பவர் ஒரு புத்தகம் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று பலராலும் கொண்டாடப்படும் கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்ட்டோ. ஆனால் அமேசான் என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்.

10ம் தேதி அன்று சுதிர்த்தா தாஸ் அமேசானில் கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோ என்ற புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை என்னுடைய கைக்கு அந்த புத்தகம் கிடைக்கும் என்ற தகவல் எனக்கு அனுப்பப்பட்டது. நானும் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் நீங்கள் ஆர்டர் செய்த புக் மாறிவிட்டது.

மேலும் படிக்க : ஆராய்ச்சியாளர்களுக்கே டஃப் கொடுக்கும் பூசாரி.. நாள் தோறும் ”கொரோனா தேவையை” வணங்கினால்?

புத்தகம் டெலிவரிக்கு வந்தால் அதை கேன்சல் செய்யவும் என்று கூறினார். நான் அலுவலகத்தில் இருந்ததால் என்னால் அதை செய்ய இயலவில்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே ஒரு புத்தகம் பார்சல் இருந்தது. அதனை நான் எடுத்து பார்த்தால் சுருக்கப்பட்ட வடிவில் பகவத் கீதை வந்திருக்கிறது.

புத்தகத்தின் இன்வாய்ஸிலும் கூட அது கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆவலுடன் பார்சலை திறந்தவருக்கு இந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது ஆமேசான். இதை பார்த்த அவருக்கு ஆச்சர்யமும் ஒரு வித சிரிப்பும் தோன்றியிருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kolkata man orders communist manifesto amazon delivers bhagavad gita

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X