கோமளவள்ளி யார்? என்பதை அதிகம் தேடிய இணையவாசிகள்.. ஏன்? எதற்கு?

கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயரே இல்லை

கோமளவள்ளி
கோமளவள்ளி

சர்கார் திரைப்படம் வெளியான பிறகு,  கோமளவள்ளி என்ற  வார்த்தை, அதன் விளக்கம்,  யார் இந்த கோமளவள்ளி என்று  இணையவாசிகள் நீ.. நான் என போட்டிப்போட்டுக் கொண்டு  கூகுளில் தேடியுள்ளனர். இதற்கான ருசிகர காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.  கோமளவள்ளி ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் காரணத்தினாலே இதுக் குறித்து தேடல் இணையத்தில் இரட்டிபாகியுள்ளது.

யார் இந்த கோமளவள்ளி?

தீபாவளியன்று  திரைக்கு  வந்த  சர்கார் திரைப்படம் போதும் போதும்.. என்ற அளவிற்கு சர்ச்சைகளை சந்தித்து விட்டது. விஜய் படம்  இப்படி சர்ச்சைகளை சந்திப்பது புதுசு அல்ல என்றாலும்,  இந்த முறை சர்காருக்கு ஆளும் கட்சியினரிடம் இருந்து சற்று கூடுதலான எதிர்ப்பே கிளம்பியுள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது  படத்தில் இடம்பெறும் காட்சிகள் மட்டுமில்லை கோமளவள்ளி என்ற பெயரும் தான். ஒரு பெயருக்காக இப்படி  ஒரு அக்கபோரா? என்று கூறுபவர்கள்   இதற்கு பின்னால் இருக்கும் கதையையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Read More: கோமளவல்லி சர்ச்சையை கிளப்பியது சர்கார் அல்ல: இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்

படத்தில் கோமளவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை வரலட்சுமி.  மிகவும் துணிச்சலாக பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  வரலட்சுமியின் ரோல், ஜெயலலிதாவை பிரதிபலிப்பதாக சர்ச்சைக்கள் வெடித்தன.

மேலும், படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயரான கோமளவள்ளி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ற தகவல்களும் கசிந்தன. ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று  தெரியவில்லை.  அதே நேரத்தில் கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே இல்லை என்று அமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, நாங்கள் கூகுளையே கேட்டுக் கொள்கிறோம் என்று படையெடுத்து சென்ற நெட்டிசன்கள் கூகுளே திணற திணற கோமளவள்ளி யார்? ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ன?  கோமளவள்ளியின் அர்த்தம் என்ன? போன்ற பல கேள்விகளை தேடியுள்ளனர்.

அதேபோல்  சசிகலா, அதிமுக, வரலட்சுமி, 49P உள்ளிட்டவற்றை சர்கார் ரிலீசுக்கு பின்னர் பெரும்பாலானோர் தேடியுள்ளனர். இதன் காரணமாக கூகுள் ட்ரெண்டிங்கில்  கோமளவள்ளி  தொடர்ந்து  தேடுதளில் இருந்து வருகிறது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Komalavalli searching high on google

Next Story
நான் பேசியதெல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க.. ரசிகர்களிடம் மண்டியிட்ட விராட் கோலி!கோலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com