கோவை கோவில் மேடு பகுதியில் ஒரு குழிக்குள் கருஞ்சாரை பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் விலங்கு மீட்பு பணியாளர் விவேக் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த விவேக் கருஞ்சாரை பாம்பை லாபகமாக பிடித்து மாங்கரை வனப்பகுதியில் விட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்: வால்பாறை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை கட்டக்கொம்பன்; வைரல் வீடியோ
மேலும் அனைத்து ஜீவராசிகளும் இந்த பூமியில் வாழ தகுதியானவை எந்த வித தொந்தரவையும் செய்ய வேண்டாம். எந்த பாம்பை கண்டாலும் பொதுமக்கள் யாரும் அதை அடித்து துன்புறுத்த வேண்டாம். உடனடியாக எங்களுக்கு தகவல் சொன்னால் நாங்கள் பத்திரமாக அதை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டு விடுவோம் என பாம்பு பிடியாளர் விவேக் தகவல் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil