New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/09/Wy2lACu9spNvCDBFcAk7.jpg)
கோவில் உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
கோவையில் உள்ள வெள்ளியங்கிரி கோவில் அடிவாரத்தில் உள்ள உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை உணவுகளை சூறையாடி செல்லும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
கோவில் உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
கோவை வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ஆண்டவர் கோவிலின் உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை உணவுப் பொருட்களை தின்ற செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பக்தர்களால் தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பூண்டி ஆண்டவர் கோவில் உள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் சிவனை தரிசிக்க மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நீதிமன்ற அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து வனத் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த மாதங்களில் மலைக்குச் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இதனை அடுத்து மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோவிலில் பக்தர்களுக்காக மூன்று நேரம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அன்னதான கூடத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு உணவு தயாரிக்க வைத்து இருந்த பொருட்களை உண்ண துவங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு இருந்த யானையை பக்தர்களுடன் சேர்ந்து சத்தமிட்டு வனப் பகுதிக்குள் விரட்டினர்.
வெள்ளியங்கிரி கோவில் உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை; செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்! pic.twitter.com/zH4rQTAo2A
— Indian Express Tamil (@IeTamil) February 9, 2025
அதனை அங்கே இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான பொருட்களை யானை புகுந்து திண்டு சென்றது பக்தர்கள் இடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.