Advertisment

காரின் கதவுகளில் அமர்ந்து தாறுமாறாக கார் ஓட்டிய கோவை இளைஞர்கள்; இணையத்தில் வீடியோ வைரல்

இரவு நேரத்தில் காரின் கதவுகளில் அமர்ந்து, அத்துமீறி பயணித்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரல்; மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

author-image
WebDesk
New Update
car viral video

இரவு நேரத்தில் காரின் கதவுகளில் அமர்ந்து, அத்துமீறி பயணித்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரல்; மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேட்டுப்பாளையத்தில் இரவு நேரத்தில் காரின் கதவுகளில் அமர்ந்து, அத்துமீறி பயணித்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை சாலை இரு வழிப்பாதையாக உள்ளது. வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர் காரின் இருக்கையில் அமராமல் நான்கு கதவுகளுக்கும் மேல் ஏறி அமர்ந்து கொண்டு பொதுமக்களுக்கும் அந்த வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளனர்.

காரை தாறுமாறாகவும் பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அந்த காரில் சென்ற இளைஞர்கள் யார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை இந்த இளைஞர்களின் அத்துமீறல்களை மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோவை வைத்து மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை காவல்துறை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர்கள் மதுபோதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் நடந்த இந்த சம்பவம் மற்ற வாகன ஓட்டிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Viral Video kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment