viral video: நிலத்தில் வாழும் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கு என்றால் அது யானைகள்தான். வலிமையான விலங்கு என்றாலும் அது யானைதான்.
மனிதர்கள் பெயரளவில் வேண்டுமானால் காடுகளை பாதுகாப்பதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் காடுகளைப் பாதுகாப்பவை யானைகள்தான். மனிதர்கள் காடுகளை ஆக்கிரமித்து சாலைகள் அமைத்து ரிசார்ட்டுகளைக் கட்டிவிட்டு யானைகள் அட்டகாசம் செய்கிறது என்று கூச்சமில்லாமல் சொல்கிறோம். காடு என்பது ஒரு பயோ டைவெர்சிட்டி. அது சமவெளிகளில் இருந்து செல்லும் மனிதர்களால்தான் பாதிக்கிறது.
யானைகள் மிகவும் ஞாபகசக்தி கொண்ட விலங்கு என்று கூறுகிறார்கள். யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படும்போது, யானைகள் அவ்வழியே வரும்போது மனிதர்களுக்கு யானைகளுக்கும் இடையேயான மோதல் நிகழ்கிறது.
சில யானைகள் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து மோதல் நிகழ்கிறபோது யானைகளை விரட்ட முடியாமல் திணரும் வனத் துறையினருக்கு உதவியாக இருப்பது கும்கி யானைகள்தான். கும்கி யானைகள் காட்டு யானைகளை மீண்டும் காட்டுக்கு விரட்டக் கூடிய பலம் வாய்ந்த யானைகள்.
தமிழ்நாட்டின் யானைகள் பராமரிப்பு மையத்தில் கும்கி யானைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றை வனத்துறை யானைகளை விரட்ட பயன்படுத்துகின்றன.
அப்படி இதுவரை யானைகளை விரட்டு 99 நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட கும்கி யானைதான் தி லெஜெண்ட் கலீம்.
கலீம் கும்கி யானை தனது 60வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. தமிழ்நாடு வனத் துறையினரால் தி லெஜண்ட் என்று போற்றப்படும் கலீம் கும்கி யானை ஓய்வு பெறும் நாளில், வனத் துறையினர் அதற்கு மரியாதை செலுத்தி பிரிவு உபசார விழாவில் சிறப்பித்துள்ளனர்.
கும்கி யானை கலீம் ஓய்வு பெறும் வனத் துறையினர் இதயம் கனக்க கண்ணீருடன் பிரிவு உபசாரம் செய்துள்ளனர். கலீம் வனத் துறையினரின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு கம்பீரமாக நிற்கும் வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரிய சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழ்நாட்டில் கோழியாமுத்தி யானைகள் முகாமில் உள்ள கும்கி யானையான கலீம் இன்று தனது 60வது வயதில் ஓய்வு பெற்றதால், எங்கள் கண்கள் கண்ணீராலும் இதயங்கள் நன்றியாலும் நிறைந்துள்ளன. 99 மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒரு லெஜெண்ட் கலீம். தமிழ்நாடு வனத் துறையிடம் இருந்து கலீம் மரியாதையை பெற்றது.” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"