ஹோட்டலில் வேலை செய்கிற பணிப் பெண்ணிடம் 2 ரவுடி வாடிக்கையாளர்கள் வம்பு செய்தபோது, அந்த பணிப் பெண் திடீரென லேடி புரூஸ் லீ-யாக மாறி அவர்களை அடித்து உதைத்து பந்தாடிய சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காலியாக இருக்கும் ஹோட்டலில் 2 ரவுடி வாடிக்கையாளர்கள் வம்பு செய்தபோது, பணிப்பெண் அவர்களை அடித்து உதைக்கும் சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சிசிடிவி வீடியோ 2020-ம் ஆண்டு பதிவாகி இருக்கிறது. காலியாக இருக்கும் ஒரு ஹோட்டலில், ஒரு டேபிளில் 2 வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பணிப்பெண் உணவு பரிமாறுகிறார். அப்போது ஒரு வாடிக்கையாளர் திடீரென மூர்க்கமாக அந்த பணிப்பெண்ணை பிடிக்கிறார். ஆனால், அந்த பணிப்பெண் பயப்படாமல், மிகவும் தைரியமாக செயல்படுகிறார். அந்த பணிப்பெண் உடனடியாக அந்த நபரை அடித்து உதைத்து குத்துகிறார். மற்றொரு வாடிக்கையாளர் அந்த பெண்ணை நோக்கி தாக்க வருகிறார். அவரையும் அடித்து வெளுக்கிறார். அந்த நபர் அங்கே இருந்த நாற்காலியை எடுத்து வீசுகிறார். ஆனால், அந்த பணிப்பெண் அந்த நாற்காலியை கையில் பிடித்துக்கொண்டு லேடி புரூஸ் லீ மாதிரி ஒரே உதை உதைக்கிறார். பறந்து போய் விழுகிறார்.
ஹோட்டல் ஒன்றில் பதிவான இந்த சிசிடிவி வீடியோ, சினிமா காட்சிகளை மிஞ்சும் விதமாக இருப்பதால் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹோட்டலில் தன்னிடம் வம்பு செய்த 2 ரவுடி வாடிக்கையாளர்களையும் அடித்து உதைத்து பந்தாடிய அந்த பணிப்பெண்ணை பலரும் லேடி புரூஸ் லீ என்று அழைத்து அவருடைய வீரத்தையும் தைரியத்தையும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த சம்பவம் எப்போது, எந்த சூழ்நிலையில் நடந்தது என்பது தெரியவில்லை. பிரபலமான ட்விட்டர் CCTV பக்கமான IDIOTS (@cctvidiots) கணக்கில் இந்த வீடியோ ட்வீட் செய்யப்பட்டுள்ளது, ‘பெண் புரூஸ் லீ’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை 39,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. பல நெட்டிசன்கள் பெண்ணின் தற்காப்புக் கலைத் திறமையைப் பார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த வீடியோ நிஜமானதா இல்லை அரன்கேற்றப்பட்டதா என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், “வரவிருக்கும் பேட்வுமன் திரைப்படம் புதியதாக இருப்பது போல் தெரிகிறது!” என்று எழுதினார். மற்றொரு நபர், “இது அரங்கேற்றப்பட்டதா? சுற்றி வேறு யாரும் இல்லை, கேமரா அவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது…” என்று பதிவிட்டுள்ளார்.
ஜூலை 2018-ல், அமெரிக்காவில் உள்ள பீட்சா கடையில் எடுக்கப்பட்ட இதேபோன்ற சிசிடிவி காட்சிகள் வைரலானது. அந்த வீடியோ கிளிப்பில், ஒரு நபர் ஒரு பணிப்பெண்ணை தகாத முறையில் தொடுகிறார். அவர் உடனடியாக அவரது சட்டையைப் பிடித்து சுவரில் மோதி அவரைக் கத்தினார். தி இன்டிபென்டன்ட் படி, போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு அழைக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.