/tamil-ie/media/media_files/uploads/2020/03/New-Project-2020-03-03T130158.408.jpg)
latharao rajkamal, actress latharao, லதா ராவ், ராஜ்கமல், வைரல் வீடியோ, லதா ராவ் ராஜ்கமல் டிக்டாக் வீடியோ, actor rajkamal, latharao rajkamal couple, latharao rajkamal tiktok video, latharao rajkamal couple tiktok video, viral video, tv serial actors
டீவி சிரீயல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை லதாராவ் தனது கணவர் நடிகர் ராஜ்கமல் உடன் இணைந்து ஜாலியாக டிக்டாக் செய்த வீடியோ ஒன்று இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகிவருகிறது.
latharao rajkamal, actress latharao, லதா ராவ், ராஜ்கமல், வைரல் வீடியோ, லதா ராவ் ராஜ்கமல் டிக்டாக் வீடியோ, actor rajkamal, latharao rajkamal couple, latharao rajkamal tiktok video, latharao rajkamal couple tiktok video, viral video, tv serial actors
நடிகை லதா ராவ் தனது கணவர் ராஜ்கமல் உடன் இணைந்து ஜாலியாக செய்த டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களில் வைலாகி வருகிறது.
அப்பா, திருமதி செல்வம் போன்ற டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லதா ராவ். சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற லதா ராவ், சினிமாவில் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களிலும் நடித்து தனது முத்திரையை பதித்தவர்.
லதா ராவ் டிவி சீரியல் நடிகர் ராஜ்கமலை திருமணம் செய்துகொண்டார். நடிகர் ராஜ்கமல் ஆனந்தம், செல்வி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இதையடுத்து, பச்சக் குதிர, சரோஜா, லிங்கா, நவீன சரஸ்தவதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வெற்றிகரமான தம்பதிகளாக இருக்கும் லதாராவ், ராஜ்கமல் தம்பதியினர் சீரியல்கள், மற்றும் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், டிக்டாக்கிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
லதாராவ் - ராஜ்கமல் ஜோடி அவ்வப்போது டிக்டாக்கில் செய்யும் வீடியோக்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்த வகையில், லதாராவ் - ராஜ்கமல் செய்த ரகளையான டிக்டாக் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது.
Dedicated To All Wives..???????? pic.twitter.com/NgJn824D7j
— latharao.raj (@Latharao12) March 2, 2020
இந்த வீடியோவில், இருவரும் சிவப்பு நிறத்தில் உடை அணிந்துகொண்டு டிக்டாக் செய்துள்ளனர். ராஜ்கமல், “உன்னை கட்டிக்கிட்டதற்கு ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம்” என்று தனது மனைவி லதாராவ் இடம் கூறுகிறார். அதற்கு, லதாராவ் “நீங்கள் சொல்லிக்கிட்டுதான் இருக்கீங்க... அதை நான் எப்பவோ செஞ்சிட்டேன்” என்று கூறி கிண்டல் செய்கிறார்.
லாதாராவ் கூறியதைக் கேட்டு ஷாக் ஆன ராஜ்கமல் பின்னணியில் விஜயகாந்த்தின் “ஒரு மூனு முடிச்சால முட்டாளா ஆனேன் தம்பி” பாடல் ஒலிக்க நடித்து பின்னுகிறார்.
லதாராவ் எல்லா மனைவிகளுக்கு சமர்ப்பித்து டுவிட் செய்திருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.