ஒரே ஒரு போஸ்டர்.. சரத்குமார், ராகவா லாரன்ஸை தூக்கி சாப்பிட்ட அக்‌ஷய் குமார் வைரல் ஃபோட்டோ!

லட்சுமி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராகவா லாரன்ஸ்தான்

laxmi bomb first look
laxmi bomb first look

laxmi bomb first look:  தமிழ் சினிமாவில் எப்போதுமே பேய் படத்திற்கு சக்கஸ் அதிகம் தான். அந்த காலம் முதல் இந்த காலம் வரை பேய் படத்தை நம்பி களத்தில் இறங்கிய எத்தனையோ வெற்றி இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸூம் ஒருவர்.

இவரின் முனி தொடங்கி காஞ்சனா  அனைத்து பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.  காஞ்சனா முதல் பாகத்தில் சரத்குமார் ரோல் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதே பாகத்தில் ராகவா லாரன்ஸூம் பெண் வேடத்தில் பேயாக அசத்தி இருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ்  தான் இயக்குகிறார்.

லஷ்மி பாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் வெளியானது. நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  இந்த நாளில், எனது லட்சுமி கதாபாத்திரத்தில் புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்தின் மூலம் உற்சாகமாகவும், பதட்டமாகவும் இருக்கிறேன். நமது கம்போர்ட் ஜோனின் முடிவில் இருந்து வாழ்க்கை தொடங்குகிறது இல்லையா? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அக்‌ஷய் குமாரின் லுக்கை கண்ட தமிழ் ரசிகர்கள் ஆடி போயியுள்ளனர். ஏற்கனவே 2.0 படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த அக்‌ஷய் குமார் இப்போது  லஷ்மி பாம் ஃபர்ஸ்ட் லுக்கிலும் பலரை கவர்ந்துள்ளார்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Laxmi bomb first look laxmi bomb akshay kumar look viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com