Advertisment

தண்ணீர் பத்தி அவருக்கு தெரியாதா என்ன? டைட்டானிக் ஹீரோப்பா! சென்னை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லி இருக்காரு பாருங்க.

லியானார்டோ டிகாப்ரியோ. சிறந்த நடிகருக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leonardo dicaprio instagram

leonardo dicaprio instagram

leonardo dicaprio instagram: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை ஹாலிவுட் வரை சென்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சென்னை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லி இருக்காரு நம்ம டைட்டானிக் ஹீரோ லியானார்டோ டி காப்ரியோ.

Advertisment

சென்னை மாநகரை கடந்த 1 மாத காலமாக தண்ணீர் பற்றாக்குறை வாட்டி வதைக்கிறது. இதுவரை கண்டிராத குடிநீர் பிரச்சனை மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் நிலவும் இந்த குடிநீர் பிரச்ச்சனை உலகளவில் ட்ரெண்டானது. சமூகவலைத்தளங்களில் இதுக் குறித்த செய்திகளும் அதிகம் பகிரப்பட்டன.

ஆங்கில ஊடகங்களின் பார்வையும் சென்னை தண்ணீர் பஞ்சம் பக்கம் விழுந்தது.இப்படி வெளியான செய்தி ஒன்றை அண்மையில் தற்செயலாக படித்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகரும் டைட்டானிக் படத்தின் கதாநாயகனுமான லியானார்டோ டி காப்ரியோ.

சென்னை வறட்சி குறித்த செய்தியைப் படித்த பின் அவர் தனது இன்ஸ்டாகிராம்  வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், அதற்காக தாம் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

அவரது கருத்தில், 'மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு கிடக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால் சென்னை மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தித்து வருகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

#Regram #RG @bbcnews: "Only rain can save Chennai from this situation." A well completely empty, and a city without water. The southern Indian city of Chennai is in crisis, after the four main water reservoirs ran completely dry. The acute water shortage has forced the city to scramble for urgent solutions and residents have to stand in line for hours to get water from government tanks. As the water levels depleted, hotels and restaurants started to shut down temporarily, and the air con was turned off in the city's metro. Officials in the city continue to try and find alternative sources of water - but the community continue to pray for rain. Tap the link in our bio to read more about Chennai's water crisis. (???? Getty Images) #chennai #watercrisis #india #bbcnews

A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on

'டைட்டானிக்', 'தி ரெவனன்ட்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் லியானார்டோ டிகாப்ரியோ. சிறந்த நடிகருக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர். இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும் குறிப்பாக டைட்டானிக் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்நிலையில் லியானார்டோ டி காப்ரியோ சென்னை தண்ணீர் பிரச்சனை பற்றி பேசியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் இந்த பதிவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்திருப்பது கூடுதல் கவனத்தையும் பெற்றுள்ளது.

Titanic Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment