அடர்ந்த வனங்களில் வசிக்கும் விலங்குகள் கூட மனிதர்கள் வாழும் பகுதிக்குள் உணவு உள்ளிட்ட தேவைக்காக நுழைநது விடுகின்றன. இந்த நிலையில் சிறுத்தை ஒன்று உணவுககாக ஊருக்குள் புகுந்துள்ளது.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை வன அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சப்தமின்றி நடந்துவரும் சிறுத்தை அங்கு கட்டிலில் தூங்கிக் கொணடிருக்கும் மனிதனுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காது.
மாறாக, அங்குள்ள நாய் ஒன்றை கவ்விச் சென்றுவிடும். இந்தச் சப்தம் கேட்டு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அந்நபர் கண் விழித்துப் பார்ப்பார்.
இது தொடர்பாக சுசந்தா நந்தா, “உணவுக்காக நாயை கவ்விச் செல்லும் சிறுத்தை” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“