வனவிலங்குகளை சுற்றிப் பார்க்கும் ஜங்கிள் சஃபாரியின் போது விலங்குகளைக் பார்ப்பது என்பது ஒரு வகையான அனுபவம், பெரும்பாலும் சிலிர்ப்பாக இருக்கும்.
இருப்பினும், கர்நாடகாவின் பன்னர்கட்டா தேசிய பூங்காவில் ஒரு சிறுத்தை ச்சஃபாரி சஃபாரி பேருந்தில் ஏற முயன்றதால் பெருந்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் கதிகலங்கிப் போனார்கள்.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது வைரலாகும் வீடியோவில், சிறுத்தை பேருந்தின் ஜன்னல் வழியாக பேருந்தில் ஏறுவதைக் காணலாம். பேருந்தின் உள்ளே இருக்கும் சுற்றுலாப் பயணிகளை சிறிது நேரம் கண்காணித்து, ஜன்னலருகே தனது பாதங்களை வைத்து ஏற முயல்கிறது. இருப்பினும், ஓட்டுநர் சஃபாரி பேருந்தை முன்னோக்கி நகர்த்தும்போது சிறுத்தை நழுவி, விபத்து இல்லாமல் செல்கிறது. சிறுத்தை பேருந்தில் ஜன்னல் வழியாக எகிறி ஏற முயற்சி செய்யும்போது, பேருந்துக்குள் இருக்கும் சுற்றுலா பயணிகள் அலறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் எழுதினார், “பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இயற்கைக்கு அருகில் உள்ள சிறுத்தைகளைப் பார்க்க நேருக்கு நேர் வாருங்கள். இந்தியாவில் உள்ள ஒரே சஃபாரி இது தான். செவ்வாய்க்கிழமை தவிர, அவர்கள் வருவதற்கு முன், உங்கள் அருகில் உள்ள ஒரு நிலப்பகுதிக்குச் செல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
Come face-to-face with leopards in its near-natural habitat at Bannerghatta Biological Park #Bengaluru. Its the only 🐆 🐆 🐆 safari in #India!! Visit soon, except Tuesdays, before they come visit an enclave near you 🙀 pic.twitter.com/eS7FZaKR0N
— Anil Budur Lulla (@anil_lulla) October 6, 2024
இந்த வீடியோவைப் பார்த்த பல சமூக ஊடக பயனர்கள் எதிர்வினையாற்றினர், இந்த வீடியோ 22 லடம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு பயனர் எழுதினார், “ஒருமுறை ஒரு புலி தனது தாத்தாவின் மடியில் இருந்து ஒரு சிறுமியை இழுத்துச் சென்றது, இப்போது கூட அது சாத்தியம் என்று என்னால் நம்ப முடியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “அவர்கள் விலங்குகளுக்கு உணவு வழங்கக்கூடாது. அதனால்தான், அவை எதிர்பார்க்கின்றன, அவர்களை நோக்கி விரைகின்றன.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“வன விலங்குகளை பயமுறுத்தாமல் இருக்க மக்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவைகளைத் துரத்துவதற்குப் பதிலாக காட்சியை ரசியுங்கள்” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.