இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்குமானதுதான். அதே போல, காடு என்பது ஏதோ மரங்கள் மற்றும் வனவிலங்குகள் மட்டுமே கொண்டது காடு அல்ல. காடு என்றால் மரங்கள், வனவிலங்குகள், மனிதர்கள், மேய்ச்சல் விலங்குகள் என பல்லுயிர்த்தன்மை கொண்டது.
வனத்தின் பல்லுயிர் தன்மையை விவரிக்கும் விதமாக, காட்டில் ஒரே இடத்தில் வெவ்வேறு நேரங்களில் சிறுத்தை, கரடி, புலி, ஆடு மேய்க்கும் மனிதன், ஆடுகள் என புழங்குகிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில், காட்டில் ஒரே இடத்தில் வெவ்வேறு நேரங்களில் சிறுத்தை, கரடி, புலி, ஆடு மேய்க்கும் மனிதன், ஆடுகள் என புழங்குகிற வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “சகவாழ்வின் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு" என்பது இந்த ஆண்டு வனவிலங்கு வார விழாவின் கருப்பொருளாகும்.
இந்த வீடியோவ வைல்ட் வேர்ல்டு இந்தியா (@wildworldindia) என்ற எக்ஸ் பக்கத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. மனித செயல்பாடுகளுடன் சேர்ந்து வேட்டை விலங்குகள், அனைவரும் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்கிறார்கள்.அதுதான் முக்கியம். நமது வன வளத்துடன் இணைந்து வாழலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், காட்டில் ஒரு பாறைகள் நிறைந்த இடத்தில், இரண்டு சிறுத்தைகள் உள்ளன. பிறகு, அதே இடத்தில் இரண்டு கரடிகள் வருகின்றன. அதே இடத்தில், ஒரு புலி வருகிறது. அதே இடத்தில், ஒரு மனிதன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துவந்து தழைகளை உடைத்துப் போடுகிறான். ஒரே இடத்தில், காட்டில் ஒரே இடத்தில் வெவ்வேறு நேரங்களில் சிறுத்தை, கரடி, புலி, ஆடு மேய்க்கும் மனிதன், ஆடுகள் என புழங்குகின்றன.
உண்மையில், இந்த வீடியோவை பார்க்கும்போது, வனத்தின் பல்லுயிர் தன்மை, வனவிலங்குகள் எப்படி ஒரு இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன என்பது வியப்பை அளிப்பதாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“