Advertisment

வேட்டையாடிய இரையுடன் மரத்தில் ஏறிய சிறுத்தையின் வலிமை; வைரல் வீடியோ

வேட்டை விலங்குகளில் மிகவும் வேகமான விலங்கான சிறுத்தை ஒன்று வேட்டையாடிய தன்னைவிட இரண்டு மடங்கு எடையுள்ள இரையுடன் செங்குத்தான மரத்தில் ஏறிய வீடியோ சமூக ஊடகங்களில் பலரையும் வியக்கவைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leopard climbing tree viral video, leopard in india, இரையுடன் மரம் ஏறும் சிறுத்தை, வைரல் வீடியோ,leopard facts, wild animals, twitter viral trends, trending. indian express, unbelivable climb, tamil indian express news

leopard climbing tree viral video, leopard in india, இரையுடன் மரம் ஏறும் சிறுத்தை, வைரல் வீடியோ,leopard facts, wild animals, twitter viral trends, trending. indian express, unbelivable climb, tamil indian express news

வேட்டை விலங்குகளில் மிகவும் வேகமான விலங்கான சிறுத்தை ஒன்று வேட்டையாடிய தன்னைவிட இரண்டு மடங்கு எடையுள்ள இரையுடன் செங்குத்தான மரத்தில் ஏறிய வீடியோ சமூக ஊடகங்களில் பலரையும் வியக்கவைத்துள்ளது.

Advertisment

வனவிலங்குகளில் மிகவும் வேகமான வேட்டை விலங்கு என்றால் அது சிறுத்தைதான். காட்டின் அரசன் என்று சிங்கம் அழைக்கப்பட்டாலும், சிங்கத்தைவிடவும் புலியைவிடவும் மிகவும் வேகமான விலங்கு என்றால் அது சிறுத்தைதான்.

வனவிலங்குகளில் பூனை குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிறுத்தை ஆகியவை மரங்களில் ஏறக்கூடியவை. பொதுவாக சிறுத்தை தான் வேட்டையாடிய இரையை மற்ற விலங்குகள் பறித்துக்கொள்ளாமல் இருக்க இரையுடன் மரத்தில் ஏறி அமர்ந்து தனியாக உண்ணும்.

அந்த வகையில், வனத்தில் ஒரு பெரிய மானை வேட்டையாடிய சிறுத்தை ஒன்று, வேட்டையாடப்பட்ட மான் தன்னைவிட இரண்டு மடங்கு அதிக எடையுடன் இருந்தபோதிலும், ஒரு செங்குத்தான மரத்தில் மிகவும் சாதாரணமாக இரையுடன் மரத்தில் ஏறி அமர்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து, ஐ.எஃப்.எஸ் அதிகாரி பிரவின் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இது நம்ப முடியாத மரம் ஏற்றம். செங்குத்தான மரத்தில், சிறுத்தை தன்னைவிட 3 மடங்கு எடையுள்ள இரையுடன் மரம் ஏறக்கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா? சிறுத்தைகள் உள்ள பகுதிகளில் பல இடங்களில் மரங்களில் அதன் இறை எஞ்சி இருப்பதைப் பார்க்கலாம். மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட வீடியோ நண்பர் ஒருவர் அனுப்பினார்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை 45,000-க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவில் சிறுத்தை இரையுடன் செங்குத்தான மரத்தில் வேகமாக ஏறுவதைப் பார்த்த நெட்டிசன்கள், பலரும் ‘இதை நம்பவேமுடியவில்லை...’ ‘இதற்கு முன்னாடி இது போல பார்த்ததே இல்லை’ என்று வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிறுத்தை ஒன்று வேட்டையாடிய இரையுடன் செங்குத்தான மரத்தில் வேகமாக மிகவும் சாதரணமாக ஏறும் வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்து சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment