வனவிலங்குகளில் மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்றால் அது சிறுத்தைதான். ஒரு பெரிய மானை வேட்டையாடி அதை வாயில் கவ்வியபடி மரம் ஏறும் வலிமை கொண்டது சிறுத்தை. ஆனால், ஒரு சிறுத்தை ‘கடகடனு’ மாமரத்தின் உச்சிக் கிளைக்கு ஏறி இறங்க முடியாமல் சிக்கித் தவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்கு வீடியோக்களுக்கு என ஒரு பெரிய வரவேற்பு உள்ளது. தினமும் பல வன விலங்குக் வீடியோக்கள் சமூக ஊடகங்களி வைரலாகி வருகிறது. அந்த வரிசையில், ஒரு சிறுத்தை ஒன்று மாமரத்தில் உச்சிக் கிளைக்கு ஏறியுள்ளது. ஆனால், அதனால், திரும்ப கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்துள்ளது. பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சிறுத்தை வனத்துறையினரால் மீட்கப்பட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரியான பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு மாமரத்தின் உச்சிக் கிளையில் ஒரு சிறுத்தை அமர்ந்திருக்கிறது. அந்த சிறுத்தை உச்சி கிளைக்கு ஏறி அமர்ந்திருக்கிறது என்று நினைத்தால், இல்லை, உச்சி கிளைக்கு ஏறிய சிறுத்தை கீழே இறங்க முடியாமல் மரக்கிளையில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பிறகு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறையினர் வந்து அந்த சிறுத்தையை மீட்டுள்ளனர்.
இந்த வீடியோ குறித்து பிரவீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “''வனவிலங்கு மேலாண்மை என்பது தினமும் சாகசமான துறையாகும். இந்த சிறுத்தை எப்படி மரத்தில் ஏறியது.. இந்த பகுதியை சுற்றிலும் இவ்வளவு மக்கள் கூட்டம் இருக்கும் நிலையில், அந்த நெருக்கடிக்கு மத்தியில் சிறுத்தையை எப்படி மீட்டிருப்பார்கள்.. இதையெல்லாம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 7 முதல் 8 மணி நேரத்திற்கு பிறகு யாருக்கும் பாதிப்பு இன்றி சிறுத்தை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மாமரத்தில் இருந்து சிறுத்தை மீட்கப்பட்ட சம்பவம் 2- 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”