கொரோனா பெருந்தோற்று காலத்தில், வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் அதிகமாக காணப்படுருகிறது. வீட்டில் முடங்கி கிடக்கும் குழந்தைகளிடம் இஸ்ரோ, நாசா, ராக்கெட் சைன்ஸ் , அமெரிக்காவில் வேலை என்பதை தாண்டி வனவிலங்கு குறித்த அடிப்படைகளை குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கான புது பொறுப்பும் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சமிபத்தில், ட்விட்டரில் சிறுத்தை திறனை வெளிபடுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சிறுத்தை மரத்தில் இருந்து இறங்குகிறதா? அல்லது மரத்தை தழுவுகிறதா? என்பது போல் காட்சியாக்கப் பட்டுள்ளது .
மற்றொரு ட்விட்டர் பதிவில்,பெரிய மரத்தில் சிறுத்தை ஒன்று எந்த வித பதட்டமும் இன்றி ஏறுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை அடிப்படை தகவல்கள்: பெரிய பூனைக் குடும்பத்தின் (சிங்கம், புலி, ஜாகுவார் ) ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய மண்டையோட்டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும். தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியனவாயும் மிகவும் நெருக்கமாகவும் இருக்கும். மேலும் ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது. கருமை நிறமான சிறுத்தைகளும் ஜாகுவார்களும் கருஞ்சிறுத்தைகள் (black panthers) என அழைக்கப்படுகின்றன.