கடலைப் போல, பிரபஞ்ச வெளியைப் போல காடுகளும் பல அதிசயங்களை மறைத்தி வைத்திருக்கின்றன. அதனால், காடுகள் அழிப்பு என்பது நாம் மரங்களை மட்டும் அழிக்கவில்லை, அதிசயங்களையும்தான் அழிக்கிறோம். காடுகளில் உள்ள அதிசயம் வனவிலங்குகள். காடுகள் அழிந்தால் வன விலங்குகள் அழியும், வன விலங்குகள் அழிந்தாலும் காடுகள், காடுகள் அழிந்தால், இந்த பூமி வறட்சி போன்ற இன்னல்களுக்கு உள்ளாகும். எனவே, காடுகளைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றியும் தொடர் விழிப்புணர்வு தேவை.
அந்த வகையில், காடுகளை, வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அரசின் பணிகளை வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு.
சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு சிறுத்தை ஏதோ தரையில் நடப்பது போல, மரத்தின் மேல் ஈஸியாக நடந்து செல்லும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். வேகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் பெற்ற சிறுத்தை மரத்தின் மேல் எளிதாக மிக அழகாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Agility, grace, enigma and beauty -thy name is leopard. Just see how effortlessly this leopard manoeuvres his moves on a tree in Nagarhole in Karnataka. As per the Status of Leopards in India Report, 2022
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 26, 2024
India's leopard population is estimated at 13,874 individuals. Madhya… pic.twitter.com/CR8aVB4tiU
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “சுறுசுறுப்பு, நடை நயம், புதிர் மற்றும் அழகு - அதன் பெயர்தான் சிறுத்தை. கர்நாடகாவின் நாகர்ஹோளில் உள்ள ஒரு மரத்தின் மீது இந்த சிறுத்தை எவ்வளவு சிரமமின்றி தனது நகர்வுகளை கையாளுகிறது என்பதைப் பாருங்கள்.
இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை அறிக்கை, 2022-ன் படி, இந்தியாவில் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 சிறுத்தைகள் என கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன - 3907 அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா -1985, கர்நாடகா 1879 மற்றும் தமிழ்நாடு 1070 சிறுத்தைகள் உள்ளன். இந்த வீடியோ - ஒரு நண்பர் பகிர்ந்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வைரல் வீடியோவைப் பார்ப்பவர்கள், இந்த சிறுத்தை தரையில் நடந்து செல்வது போல, எவ்வளவு ஈஸியாக மரத்தின் மேல் நடந்து செல்கிறது பாருங்கள் என்று வியந்து வருகிறார்கள். நீங்களே பாருங்கள், இந்த சிறுத்தை எவ்வளவு அழகாக மரத்தின் மேல் நடந்து செல்கிறது பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.