கர்நாடாக மாநிலம், சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து நடந்து செல்லும் சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
கர்நாடாகாவின் பந்திப்பூர் வனப்பகுதியையொட்டி, எடபெட்டா மலைப்பகுதியில் சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டதால், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை ஒன்று மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து அங்கும் இங்குமாக அலைந்தது தெரியவந்தது. சிறுத்தை மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
#OMG! Students at a medical college watch a #CCTV grab of a #leopard that entered their #hostel campus in Chamarajanagar, #Karnataka last night. #animal #conflict @IFS_Karnataka @ParveenKaswan @Amitsen_TNIE #AnimalCrossingNewHorizons @BoskyKhanna @aranya_kfd pic.twitter.com/vY5c8nbFMw
— anil lulla (@anil_lulla) January 7, 2021
அந்த சிசிடிவி வீடியோவில், சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை வழி தெரியாமல் அறைக்குள் புகுவதும் படிக்கட்டு வழியாக வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.
மருத்துவக் கல்லூரிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி வீடியோ மூலம் இருப்பது தெரியவந்ததையடுத்து, மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுத் தங்கும் அறையிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையைத் தேடிப் பார்த்தபோது, அது மருத்துவக் கல்லூரிக்குள் இருந்து மற்றொரு வழியாக வெளியேறியது தெரியவந்தது. இருப்பினும், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரிகள் சிறுத்தை நுழைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Leopard entered into medical college viral video
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி