ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் வீடியோ பதிவில் சிறுத்தை ஒன்று வீட்டின் தோட்டத்துக்குள் நுழையும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்து லாப்ரடோர் ரெட்ரீவர் வகை வளர்ப்பு நாயைத் தாக்கியது.
வீட்டின் தோட்டப் பகுதிக்குள் நாய் நுழைவதிலிருந்து இந்த வீடியோ தொடங்குகிறது. ஒரு சிறுத்தை பின்னால் இருந்து குதித்து நாயைத் தாக்குகிறது. கடுமையான போராட்டம் சிறுத்தை அந்த நாயின் கழுத்தை கடித்து அதன் பிடியை அப்படியே வைத்திருக்கிறது. சிறுத்தையின் பிடியில் இருண்நு நாய் திமிறி எழுவதற்கு முயற்சிப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த சண்டை நடக்கும் போது, ஒரு பெண்ணின் அலறல் சிறுத்தையின் கவனத்தை சிதறடித்து, நாயை விடுவித்துவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடுகிறது. மீண்டும் எழுந்த நாய் சிறுத்தையை பின் தொடர்ந்து விரட்டிச் செல்கிறது. அதற்குள், வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வந்ததும், நாய் அந்த பெண்ணிடம் திரும்பி வருகிறது. பின்னர், அந்த தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.
என்.டி.டிவி-யில் வெளியான செய்தியின்படி, மவுண்ட் அபுவில் பேயிங் கெஸ்ட் விடுதியான சன்ரைஸ் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்து ஒரு எக்ஸ் பயனர் எழுதினார், “மவுண்ட் அபுவில் ஒரு சிறுத்தை வன சுற்றுச்சூழல் லாட்ஜ் அருகே ஒரு நாயைத் தாக்கும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக உதய்பூரில் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளிடையே பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் வருகை தருகிறீர்கள் என்றால் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆபத்தான வீடியோ காட்சிகள் இப்பகுதியில் சுற்றுலாப் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. பார்வையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் உள்ளூர் வனவிலங்கு பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்துகிறது.
வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:
Shocking incident in Mount Abu as a panther attacks a dog near Forest Eco Lodge. 🐾 This has raised safety concerns among tourists, especially after similar incidents in Udaipur. Stay alert and follow safety guidelines if you're visiting! #MountAbu #WildlifeSafety #PantherAttack… pic.twitter.com/psP7dbSwK7
— Pradeep Singh (@PBeedawat) November 15, 2024
இந்த ஆண்டு அக்டோபரில் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தார். செய்திகளின்படி, சிறுமி தனது தாய் மற்றும் உறவினர்களுடன் தீவனம் சேகரிப்பதற்காக காட்டில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.