/indian-express-tamil/media/media_files/2025/10/01/lepard-enters-2025-10-01-15-02-58.jpg)
அங்கே கேண்டீனுக்குள் சாவகாசமாக இருந்த ஒரு பூனையை வேட்டையாடும் நோக்குடன் மின்னல் வேகத்தில் அந்தச் சிறுத்தை நுழைந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வைக் கண்ட கேண்டீன் ஊழியர் ஒருவர், நிலைமையை உணர்ந்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். Photograph: (Image Source: tweetKishorec/x)
நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் எப்போதுமே வனவிலங்குகளின் புகலிடம்தான். புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற பல வனவிலங்குகள் இங்கு சர்வ சாதாரணமாக நடமாடுவது வழக்கம். உணவு மற்றும் தண்ணீருக்காக இவை மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதும், இதனால் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இடையே ஏற்படும் மோதலால் பரபரப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அப்படித்தான், கோத்தகிரி அருகே நடந்த சமீபத்திய சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு அருகில் உள்ள ஃபாரஸ்ட் ஹில் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் எஸ்டேட் கேண்டீனுக்குள் இருந்த பூனையைப் பிடிக்க ஒரு சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
Great escape 🐆🐈
— Kishore Chandran (@tweetKishorec) September 30, 2025
Somewhere in Nilgiris
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பூனையைப் பிடிக்க சிறுத்தை ஒன்று உணவகத்திற்குள் நுழைந்தது. pic.twitter.com/gK5ma0Xiqr
அங்கே கேண்டீனுக்குள் சாவகாசமாக இருந்த ஒரு பூனையை வேட்டையாடும் நோக்குடன் மின்னல் வேகத்தில் அந்தச் சிறுத்தை நுழைந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வைக் கண்ட கேண்டீன் ஊழியர் ஒருவர், நிலைமையை உணர்ந்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பிக்க பூனைக்கும் அந்த ஊழியருக்கும் இடையில் ஒரு திகில் ரேஸ் நடந்தது என்று கூறும் விதமாக அங்கே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில், பூனையைத் துரத்திக்கொண்டு கேண்டீன் முழுவதும் சிறுத்தை பாய்ந்து ஓடுகிறது., அந்தப் பூனை தனது சாமார்த்தியத்தால், சிறுத்தையின் கண்களில் மண்ணைத் தூவி, லாவகமாக அந்த இடத்தைவிட்டுத் தப்பிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக, கேண்டீன் ஊழியரும் சிறுத்தையின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர்தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதையும், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த வீடியோக்கள் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.