Viral Video: சிறுத்தை ஒன்று பூனையைப் பிடிக்க ஓடியதில் தவறுதலாக கிணற்றில் விழுந்து படிக்கல்லில் அமர்ந்திருக்க, கிணற்றுத் தண்ணீரில் நீச்சல் அடிக்கும் பூனையோ சிறுத்தையை சீண்டி விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காடு தனக்குள்ளே பல அதிசயங்களை வைத்திருக்கிறது. காடுகளுக்குள்ளே இருக்கும் வன விலங்குகளும் அதிசயமானவைதான். வனவிலங்குகளின் செயல்பாடுகள் கணிக்க முடியாதவை. வலிமை வாய்ந்த வேட்டை விலங்குகளை சில சமயம் பலவீனமான விலங்குகள் ஏமாற்றி சீண்டி விளையாடும். அது போன்ற காட்சிகள், பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். அப்போதெல்லாம், யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பு என்ற பழமொழி நினைவுக்கு வரும்.
அந்த வகையில், சிறுத்தை ஒன்று பூனையைப் பிடிக்க ஓடியதில் தவறுதலாக கிணற்றில் விழுந்து படிக்கல்லில் அமர்ந்திருக்க, கிணற்றுத் தண்ணீரில் நீச்சல் அடிக்கும் பூனையோ சிறுத்தையை சீண்டி விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பத்திரிகையாளர், வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞர் ரஞ்ஜீத் ஜாதவ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று பூனையைப் பிடிக்க விரட்டியபோது தவறுதலாக சிறுத்தையும் பூனையும் விவசாயக் கிணற்றில் விழுந்துவிடுகிறது. சிறுத்தை மேலே ஏற முடியாமல், கிணற்றில் உள்ள படிக்கல்லில் அமர்ந்திருக்க, கிணற்றில் நீச்சல் அடித்து சுற்றிவரும் பூனை சிறுத்தை மீது ஏறி சீண்டி விளையாடுகிறாது. சிறுத்தையோ உருமுவதோடு என்ன செய்வது என்று தெரியாமல் படிக்கல்லிலேயே அமர்ந்திருக்கிறது. கிணற்றுக்கு மேலே இருந்து இந்தக் காட்சியைப் பார்க்கும் மனிதர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்கிறார்கள்.
ரஞ்சித் ஜாதவ் இந்த வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “நாசிக் மாவட்டம் சின்னாரில், ஒரு சிறுத்தை பூனையை துரத்தும்போது, திறந்தவெளி கிணற்றில் விழுந்துவிட்டது. பூனை பெரிய பூனையை (சிறுத்தை) நோக்கி ஆக்ரோஷமாக சீண்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள, ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா, குறிப்பிடுகையில், “வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையேயான தருணத்தில், உயிர்வாழ்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது. பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், கிணற்றின் படிக்கல்லில் அமர்ந்திருக்கும் சிறுத்தையை பூனை ஆக்ரோஷமாக சீண்டி விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“