viral video: 20 அடி உயர சுவர் உடன் இணைந்த கம்பி வேலியை சிறுத்தை ஒன்று ஒரே தாவில் ஏறி தாண்டிய வீடியொ சமுக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வன விலங்குகளைப் பற்றிய வீடியோக்கள்தான். ஏனென்றால், வன விலங்குகளின் மீது மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வம் எப்போதும் குறைவதே இல்லை.
இந்திய வனத்துறை அதிகாரிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வனத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்த வீடியோக்கள் மனிதர்கள் வனவிலங்குகளைப் புரிந்துகொள்வதற்கும், விழிப்புணர்வு பெறுவதற்கும் உதவுகின்றன. அதே நேரத்தில் அவை நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்தவையாகவும் இருந்து பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கின்றன.
அந்த வல், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், சுவர் உடன் இணைந்த 20 அடி உயர வேலியை சிறுத்தை ஒன்று ஒரே தாவில் ஏறிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பார்வையாளர்களை ஈர்த்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
சிறுத்தை மிகவும் வேகமான விலங்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறுத்தை எந்த அளவுக்கு வேகமானது, வலிமையானது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று.
இந்த வீடியோ இரவு நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர் உடன் இணைந்த கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சுவர் அருகே வரும் சிறுத்தை, உயரத்தைக் கணித்து ஒரே தாவில் வேலியின் உச்சியில் ஏறி நிற்கிறது. இந்த வீடியோ பார்க்கும்போது சிறுத்தையின் வேகத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.
பர்வீன் கஸ்வான் இந்த வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “சிறுத்தையின் வேகத்தைப் பாருங்கள். பூமியில் மிகவும் இருக்கும் பெரும் பூனைகளில் ஒன்று. 15+ அடி உயர சுவரை மிகவும் சீராக கடக்கிறது. இடம் தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"