Advertisment

பொள்ளாச்சி அருகே பகலில் சிறுத்தை நடமாட்டம்; சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ வைரல்

சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் தாங்கள் வரும் வாகனத்தை விட்டு வனப்பகுதியில் இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Leopard1

பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இதன் அருகில் உள்ள கேரளா பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் காட்டு யானைகள், புள்ளி மான்கள், காட்டு மாடு, புலி, சிறுத்தை கரடி மற்றும் பறவைகளில் அபூர்வ இனமான இருவாச்சிமற்றும் எண்ணற்ற தாவரங்கள் பறவை இனங்கள் உள்ளன. டாப்ஸ்லிப் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

Advertisment

இங்குள்ள பரம்பிக்குளம் பகுதிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வருகின்றனர். 

இவர்களுக்கு கேரள வனத்துறை சார்பில் பரம்பிக்குளம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் பெற்று வனப்பகுதிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். தற்போது அப்பகுதியில் உள்ள அட்டப்பாடி சோதனை சாவடி அருகே நான்கு வயது மதிப்புள்ள சிறுத்தை பகலில் நடமாடி உள்ளது.

Advertisment
Advertisement

இதனை சுற்றுலா சென்ற பயணி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் தாங்கள் வரும் வாகனத்தை விட்டு வனப்பகுதியில் இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment