New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-8-3.jpg)
சிறுத்தை பொதுவாக 20 அடிக்கும் தாவும், 10 அடி வரை காற்றில் பறக்கும். அத்தகைய சக்திவாய்ந்த பெரிய பூனை.
பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் ஒன்று சிறுத்தை. சூழலுக்குத் தக்கதான வேட்டையாடும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை, மணிக்கு 58 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை, பாரமான இரையையும் தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல், மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக சிறுத்தை உள்ளது என்று தமிழ் விக்கிப்பீடியாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில், வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் சிறுத்தையின் திறமையை விவரிக்கும் அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாய் ஒன்றை சிறுத்தை வேட்டையாட முயற்சிக்கிறது.
Struggle for existence. Leopard on its heels, chasing one of its favourite prey.
A leopard is known to leap over 20 feet and can jump up to 10 feet into the air. Such a powerful big cat.. pic.twitter.com/tZ3rjVJTmP
— Susanta Nanda IFS (@susantananda3) October 26, 2020
சுசாந்தா நந்தா தனது வீடியோவில், " சிறுத்தை தனது விருப்பான இரையை துரத்துகிறது. எல்லாம் உயிர் வாழ்க்கைக்கான போராட்டம். சிறுத்தை பொதுவாக 20 அடிக்கும் தாவும், 10 அடி வரை காற்றில் பறக்கும். அத்தகைய சக்திவாய்ந்த பெரிய பூனை " என்று பதிவிட்டார்.
Is that domestic cat?? pic.twitter.com/IzLNQi1GmF
— Sana T (@santhd) October 26, 2020
— Yugraj???? (@Yugrajesh1) October 26, 2020
வீட்டு வாசலில், சிறுத்தையின் பெரிய வேட்டை சத்தமில்லை நடைபெறுகிறது. சிசிடிவி கேமராக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அதை திகைப்போடு படம்பிடிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.