/tamil-ie/media/media_files/uploads/2020/04/New-Project-54.jpg)
leopard and python fights viral video, cheeta and python fights, சிறுத்தையும் மலைப்பாம்பும் சண்டையிடும் வீடியோ, வைரல் வீடியோ, leopard python fights, Tamil Viral News, Tamil Trending News, Tamil Video News, viral video, Tamil viral video, Tamil trending video,tamil videos, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, Tamil news, Tamil TV news, Tamil television news, Tamil video
Tamil Video News: வனத்தில் சீறும் சிறுத்தைக்கும் அசாதாரணமான மலைப்பாம்புக்கும் இடையே நடந்த கடும் சண்டையின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
பொதுவாக காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் மான், காட்டெருது, முயல் போன்ற வன விலங்குகளை வேட்டையாடி உண்பது என்பது உணவுச் சங்கிலியில் இயல்பாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். பெரும்பாலும், வேட்டையில் வேங்கைகளே வெற்றி பெற்றாலும் சில நேரங்களில் அசாதாரணமாக இரையாகும் விலங்குகளும் எதிர்பு தெரிவித்து கடுமையாகப் போராடும். சில நேரங்களில் எதிர்த்தும் சண்டையிடும்.
அப்படி சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் இரையைத் தாக்கும்ப்போது இரையாகக் கூடிய சில வலிமையான விலங்குகள் எதிர்த்து போராடுவதோடு மட்டுமில்லாமல் எதிர்த்து சண்டையிடவும் செய்யும். அது போன்ற வீடியோக்கள் எப்போதும் வனவிலங்குகள் பற்றிய வீடியோக்கள் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்கும்.
அப்படி, வனத்தில் சிறுத்தை ஒன்று ஒரு மலைப்பாம்பை தாக்க அந்த மலைப்பாம்பு அசாதாரணமாக சிறுத்தையை சுற்றி வளைத்து ஆக்ரோஷமாக தாக்குகிறது இந்த வீடியோவை வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ஐ.எஃப்.எஸ் டுவிட்டரில் பகிர வைரலாகி வருகிறது.
Leopard & Python squaring upto each other. As the python constricts, leopards agility takes care to escape the seize & kills it.
Not very uncommon. Python ends as prey to the leopard. pic.twitter.com/wBItYHtQZ2
— Susanta Nanda IFS (@susantananda3) April 12, 2020
இந்த வீடியோ பற்றி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “சிறுத்தையும் மலைப்பாம்பும் கடுமையாக சண்டை போட்டன. மலைப்பாம்பு உறுதியுடன் தாக்கியது. சிறுத்தை எச்சரிக்கையுடன் சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பிக்கவும் அதைக் கொல்லவும் போராடுகிறது. வழக்கத்திற்கு மாறாக அல்லாமல், இறுதியில் மலைப்பாம்பு சிறுத்தைக்கு இரையானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுத்தையும் மலைப்பாம்பும் கடுமையாக சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.