மேற்கு மலை தொடர்ச்சியான நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவுக்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வகையில் குன்னூர் சிங்காரா எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பாறையின் சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துள்ளது. நீண்ட நேரமாகியும் அங்கிருந்து செல்லாத சிறுத்தையை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஓய்வு எடுத்த சிறுத்தையை வீடியோ எடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் இந்த இடம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள, ஆடு மாடு மேய்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென குன்னூர் வனசரகர் சசிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“