New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/page.jpg)
சிறுத்தை வேட்டைனா இதுதான்
தரையில் இருந்தாலும் சரி, மரத்தில் இருந்தாலும் சிறுத்தையின் வேகத்துக்கு சிறுத்தைதான் நிகர். மரத்தில் குரங்கு தாவி தப்பி ஓடும்போது, சிறுத்தை அதை பாய்ந்து பறந்து தாக்கி வேட்டையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை வேட்டைனா இதுதான்
viral video: வனவிலங்குகளில் மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்றால் அது சிறுத்தைதான். அது தரையில் இருந்தாலும் சரி, மரத்தில் இருந்தாலும் சரி, சிறுத்தையின் வேகத்துக்கு சிறுத்தைதான் நிகர். மரத்தில் குரங்கு தாவி தப்பி ஓடும்போது, சிறுத்தை அதை விடாமல் பாய்ந்து பறந்து தாக்கி வேட்டையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காடு தனக்குள்ளே ஏராளமான அதிசயங்களை மறைத்து வைத்திருக்கிறது. காடுகளையும் காட்டு விலங்குகளையும் நேசிப்பவர்களுக்கு காட்டின் அதிசயங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டு அனுபவமாகும். காடுகள் என்றாலே வனவிலங்குகள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வனவிலங்குகளே காடுகளைப் பாதுகாக்கின்றன என்று சொல்லலாம்.
சிறுத்தை ஒன்று மரத்தின் மீது இருந்து பாய்ந்து ஒரு குரங்கை வேட்டையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் என்னா வேகம், சிறுத்தை வேட்டைனா இதுதான் என்று கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
Leopards are not only opportunistic but versatile hunters. pic.twitter.com/bYGxGLFJqr
— Susanta Nanda (@susantananda3) April 6, 2023
சிறுத்தை மரத்தின் மீது இருந்து பாய்ந்து குரங்கை வேட்டையாடும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“சிறுத்தைகள் சந்தர்ப்ப வேட்டை விலங்கு மட்டுமல்ல, அட்டகாசமான பல்திறன் வேட்டை விலங்கு” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், ஒரு சிறுத்தை ஒரு குரங்கை குறி வைத்து விரட்டுகிறது. அந்த குரங்கு மரத்தின் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்து தப்பிக்கிறது. சிறுத்தையும் விடாமல் பின்னாலேயே மரத்தின் மீது ஏறி துறத்துகிறது. அதோடு, குரங்கு பின்னாலேயே மரத்தில் இருந்து கீழே குதிக்கிறது. மீண்டும் குரங்கு மரத்தில் ஏறி அருகே இருக்கும் மரத்தின் கிளைக்கு வேகமாக தாவுகிறது. ஆனால், இந்த வேகமான வேட்டை விலங்கான சிறுத்தை வேகமாக மரத்தில் ஏறி பாய்ந்து பறந்து குரங்கை வேட்டையாடி வீழ்த்துகிறது. இந்த வீடியோவில் சிறுத்தையின் வேகத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ப்பா… என்னா வேகம்! சிறுத்தை வேட்டைனா இதுதான் என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.